Wednesday, July 18, 2012

முன்னுரை !!

(இங்கு க்ளிக் செய்து மகா மந்திரத்தை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


 



கிரிஸ்ணர் ஒரு இறைதூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!


கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னதாக சில வார்த்தைகள் உள்ளன!இந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்பது என் கருத்து!கீதையின் மூலமான கருத்தையும் அதன் ஓட்டத்தையும் உள்வாங்குகிற ஒரு நபர் அவர் தன்னை கடவுள் என்று சொல்லியிறுக்கவே மட்டார் என்பதை உணரலாம்!அவர் கடவுளை அடைவதற்கு எது நல்ல பாதை என்பதைப்பற்றி விலா வாரியாக ;வழிபாடு என்கிற சடங்கு மட்டும் போதுமானதல்ல--ஒரு பக்தன் தன் மனதை;வாழ்வு முறையை திருத்த வேண்டும்--தன்னை உணர்ந்து தன்னைதானே சீர்திருத்த வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான தத்துவ தெளிவை முன் வைத்தவர்!

அவரது காலம் அசுரர்கள் ஆதிக்கம் மேலோங்காத துவாபர யுகம் !--கலியுகம் தொடங்குவதற்கு முந்தய காலம்! கி.மு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் கலியுகத்திற்கு முன்பு அசுரர்கள் நேரடியாக பூமியில் கிரியை செய்தார்கள் அவர்களை கிருஸ்ணர் அழித்தபிறகு அவர்கள் நேரடியாக கிரியை செய்யாமல் மனிதர்களின் சிந்தனையில் இச்சைகளை துண்டி ; இன ; மத வெறிகளை தூண்டி மனிதருக்கு மனிதர் தீங்கிழைத்துக்கொள்ள மறைமுகமாக - பின் புலத்தில் அரூபமாக செயல்படுபவர்களாக மாறிக்கொண்டனர் ! கலியுகத்தில் கொஞ்ச நாள் மனிதர்களின் சிந்தனைகள் அசுரர்களால் சீர் கெடுவதை அனுமதித்தும் - இப்படி நடக்கும் என சுட்டி காட்டி விட்டும்தான் கிருஸ்ணர் பரமேறினார்

கலியுகத்தில் ஆரிய தேசத்தில் (மத்திய கிழக்கு ஆசியாவில் ) ஆப்ராகாம் என்பவர் நல்ல பக்தராக கடவுளை தேடியதால் ; இதுவரை இந்தியாவில் - திராவிடர்களுக்கு மட்டுமே வேதம் வெளிப்படுத்தப்பட்டு மற்ற இனங்களுக்கு வேதம் இல்லாததை கொடுக்கவும் கடவுள் சித்தம் வைத்தார் ஆப்ரஹாம் மூலமாக வேதங்கள் யூதம் ; கிறிஸ்தவம் ; இசுலாம் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டன
குரானுக்கு பின்பு ஆரியத்தில் வந்த ஒரு முக்கியமான மார்க்கம் பஹாய் கிருஸ்ணரை இறைதுதராக அங்கீகரித்துள்ளனர் அத்தோடு கலியுக முடிவில் உலகை நியாயம் தீர்க்க வரப்போகிறவர் என ஆப்ராகாமிய வேதங்கள் அங்கீகரித்துள்ள மேசியா கிருஸ்ணரே என ஒத்துக்கொண்டுள்ளனர்

பைபிளும் குரானும் வரப்போகிறவர் இயேசு என சொல்லும்போது அவ்வழியில் அடுத்து வந்த பஹாய் மார்க்கம் அது கிருஸ்ணர் என்பதை ஒத்துக்கொண்டுள்ளது

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

இந்து மார்க்கத்தினர் திரேதா யுகத்தில் ராமராக வந்தவர்தான் துவாபர யுகத்தில் கிருஸ்ணராக வந்தார் ; அவர்தான் கலியுக முடிவில் கல்கியாக சத்திய யுகத்தை நிறுவ வருவார் என்பதை அறிந்திருக்கின்றனர்


கலியுகத்தில் ஆரியத்தில் வந்த வேதத்தினர் யுக முடிவில் இயேசு வருவார் என எதிர்பார்க்கின்றனர்


உண்மை யாதெனில் கிருஸ்ணர் தான் கலியுகத்தில் ஆரியத்தில் இயேசுவாக வந்தார் என்பது - இந்தியாவைத்தவிர்த்து - திராவிடர் அல்லாத மற்ற இனத்தாருக்காக அவர் இயேசுவாக அவதரித்தார்

துவாபர யுகத்தில் கிருஸ்ணர் அசுரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வதை அழித்தார் . கடவுளை அடைய 18 யோக சூத்திரங்களை கீதையாக அருளினார் ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களில் ஆங்காங்கே மனிதர்களின் பிரார்த்தனைகளாக விரவிக்கிடக்கும் உண்மைகளை - சத்தியத்தை பிழிந்து ரசமாக கீதையாக கொடுத்து விட்டார் 4 வேதங்களை படித்தறிவதும் கீதையை அறிவதும் ஒன்றே

அவரைப்பற்றியும் மஹாபாரத யுத்தத்தை பற்றியும் கீதையை பற்றியும் செவி வழி செய்தியாக நாடகமாக பல ஆண்டுகள் இந்தியாவில் வழங்கி வந்ததை `வியாச` முணிவர் தொகுத்து எழுதினார்!இதற்குள் பல திருத்தல்கள் நேர்ந்து விட்டது!கிரிஸ்ணர் என்ற இறைதூதர்-மலக்கு தூதர் காலத்திற்க்கும் வியாசருக்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்கிற கவணத்தோடு கீதையை ஆராயவேண்டும்!

கிரிஸ்ணர் ஒரு தூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!

யார் கடவுள் என்பதை அறிந்து கொள்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை!அதைவிட கடவுளை கடவுள் என்று மட்டும் எடுத்துக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் சிறந்தது;மனிதர்கள் சரியான பாதையில் முன்னேற விடாமல் தடுக்க இடைவிடாது முயற்சி செய்யும் அசுரர்களே ஒன்றுக்கும் உதவாத `யார் கடவுள்` என்கிற விசயத்தை பிரபலமாக்கி அதை தூண்டி மதசண்டை போடவும் ஒன்றைஒன்று வெறுத்து அதிலுள்ள உண்மைகளை அறிய விடாமல் தடுப்பதுமான சதியை செய்து வருகிறார்கள்!ஒருவர் கடவுள் யார் என்பதை அறிந்து இருந்தும் தங்களிடமுள்ள ஆணவம் ; கன்மம் ; மாயை ஆகியவைகளை விட முடியாமல் மண்ணாசை ; பொன்னாசை ; பெண்ணாசைகளில் உழன்று கொண்டிருந்தால் அவருக்கு ஒன்று ஆகப்போவதில்லை ஐந்து வேலை தொழுவதால் மட்டும் சிலரை சொர்க்கத்தில் கொண்டு போய் விட்டால் அந்த சொர்க்கமும் நாறிப்போய் கடவுள் வேறு இடம் பார்த்துக்கொண்டு போவதத்தை தவிர வழியில்லாமல் போய் விடும்


ஆகவேதான் பக்தி மார்க்கத்தில் உள்ள நல்லோர்களையும் இப்பூமியிலேயே சத்திய யுகத்தில் வாழ வைத்து அவர்களை செம்மைப்படுத்த கல்கியோ அல்லது இயேசுவோ மீண்டும் பூமிக்கு வருவது கடவுளின் திட்டமாக இருக்கிறது எல்லா மதங்களிலும் கடவுளின் வெளிப்பாடு உள்ளது!அது போல் எல்லா மதங்களிலும் அசுர மாயைகளும் கலந்து விட்டன! கடவுளிடமிருந்து வராத மதங்கள் அனைத்தும் ஏற்கனவே அழிந்து போய் விட்டன . இவ்வளவு மதப்பிரச்சாரத்திற்கு பின்பும் ஒரு மதம் அழியாமல் இருக்கிறது என்றால் அது கடவுளிடமிருந்து வந்தது என்பதை எல்லா மதத்தினரும் உணரவேண்டும்

கடவுளால் இறைதூதர் என பிரபலபடுத்தப்பட்ட ஒரு தூதர் அதற்கான சாண்றுகளை அவர் வாழ்ந்த காலத்தில் வெளிக்காட்டி இருப்பார் !அப்படிப்பட்ட ஒரு நபர் உயிரோடு இறுக்கும் போது கடவுளின் அதிகாரத்தின் பேரில் சொல்லுகிறது போல அவர் சென்று போன பிறகு அவர் எழுதியதை புரிந்து கொண்டு நடக்கிற நம்மை போன்ற சாதாரன மனிதர்கள் சொல்லக்கூடாது!

ஒரு இறைதூதருக்கு வெளிப்படுத்தப்பட்டது அன்றைய சுழ்நிலையைப்பொருத்து அவருக்கு மட்டுமே சொல்லப்பட்டது அதை நாம் வாசித்து விட்டு கடவுளின் ஏஜெண்டு போல கற்பனை செய்துகொள்ளகூடாது இன்றைக்கு இப்படிப்பட்ட கற்றுக்குட்டி ஏஜெண்டுகள் அநேகர் தோன்றி கடவுளுக்காக என நினைத்துக்கொண்டு மற்ற மனிதர்களை கொண்று நேராக நரகத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்

நாம் புரிதலில் குறைவுள்ளவர்கள் என்கிற தாழ்மை நம்மை கடவுளிடத்து நனமைகளை பெற்றுத்தரும்!

குர்ஆன்3:55 பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று கடவுள் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!


குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள், பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!

எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்!

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிற மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!

குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!

யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை, எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிறோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !

முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!

உலகின் சற்குருநாதர்கள் நால்வர் மட்டுமே ஒருவர் ஆத்மாவிற்கு சற்குருவான நாராயணன் அடுத்தவர் சரீரத்திற்கு சற்குருவான சிவன் . நன்மை தீமைகளை தூண்டி விடும் சற்குரு ஆதி சேஷன் என்றால் அதில் அடி உதை பட்டு நிம்மதியை தேடுவோருக்கு பக்தி ; யோகம் ; சாந்தி செளபாக்கியத்தை அருளும் ஆதிசக்தி  .

சரீரத்தில் அப்பியாசிக்கப்படும் யோகக்கலைகள் - தியானம் தவம் வாசி யோகம் முதலானவை சிவனை - தட்சினாமூர்த்தியாக - வழிவழியாக சித்தர்கள் யோகிகள் மூலமாக உலகில் வந்துள்ளது

ஆத்மாவிற்கு வேதங்களாக (இந்து - ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் - சதுர் வேதங்கள - இவற்றின் சாரமான கீதை ; ஆரியத்தில் யூதர்களின் தவ்ராத் ; கிறிஸ்தவர்களின் பைபிள் ; இசுலாத்தின் குரான் ) சிந்தையில் உணர்ந்து வாழ்வை சீர்படுத்துவதாக ; சமூக சட்டங்களாக ; பிராத்தனையின் மூலமாக கடவுளோடு உறவு கொள்வதாக உள்ளவை


ஆத்மாவிற்கு சற்குருவானவர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)இயேசு 4)முகமதுநபி மட்டுமே!இவர்கள் அவதார துதர்கள் . இவர்களோடு கூட மனிதர்களில் மேம்பட்ட ஆத்மாக்கள் புத்தர் ; மகாவீரர் ; வள்ளலார் ஆதி சங்கரர் ; மத்வர் ; ராமானுஜர் குருநானக் ; ராகவேந்திரர் என்றால் ஆரியத்தில் மோசே முதலான ஆப்ராகாமிய துதர்கள் வரை மட்டுமே அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!

இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்! இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல முயற்சிப்பது நமது கடமை!இவ்வேதங்களில் சமூகத்தில் கலப்படங்கள் சீர்கேடுகள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்! அதை விட்டு விட்டு எங்கள் தூதர் மட்டும்தான் துதராக இருக்கவேண்டும் வேறு யாரையும் அணுப்பகூடாது என கடவுளுக்கே கட்டுப்பாடு போடுவது குழந்தைதனமானது !!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 18 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே இந்து வேதங்களையும் பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அசுரர்களே ! அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவதும் அசுரர்களே !

ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் ஒவ்வொரு நாளும் குருஸேத்திர யுத்தம் நடத்தி கொண்டுதான் உள்ளனர் ! மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!

மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!

இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,உள்ளனர் ! அவர்கள் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!!

கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் மனிதன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!

கீழே உள்ள லிங்க்குகளை அழுத்தி ஒவ்வொரு அத்யாயமாக படிக்கலாம்


தன்னுரை


கீதா உபதேசத்திற்கான காரணிகள்


யோகம் 1: விசாரணை யோகம் !!!


யோகம் 2 சாங்கிய யோகம் !


யோகம் 3`கடமையைச்செய் பலன் விளைவில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம்!!


யோகம் 4 ஞான கர்ம சந்நியாச யோகம் !!!


























தன்னுரை




ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது
கீதையை மறு பொழிப்பு செய்ய ஆரம்பித்து .
உண்மையாகவே இதைப்பற்றிய எந்த திட்டமும் எனக்கு இல்லை . வள்ளலாரைப்பற்றி கொஞ்சம்

அனுபவப்படவேண்டும் என்ற உணர்வு அப்போது இருந்தது .

ஆகவே நான் தைப்பூசம் அன்று வடலூர் சென்றேன் . எல்லோரும் ஜோதி பார்க்க முட்டி கொண்டிருந்ததால் நான் சித்தி வளாகம் சென்றேன் . கூட்டம் இல்லை . ஆகவே ஏகாந்தமாக தியானத்தில் ஆழ்ந்தேன் . .சற்று நேரத்தில் சிவந்த ஒளி ஒன்று தோன்றி என்னை நோக்கி வந்து என் நெற்றியின் ஊடாக எனக்குள் கலந்து விட்டது . உள்ளே ஒரு குரல் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் தேசத்தில் முதல் முதலாக ஒளி தேகம் அருளப்பெற்றேன் . என்னைப்பற்றியும் அதில் உன்னைப்பற்றியும் கூட பைபிளில் எழுதப்பட்டுள்ளது . வரப்போகிற சமரச வேதத்திற்கான தரிசனத்தை முன்னெடு என்றது .



பைபிளில் யாராவ்து ஒளி தேகியாகி பரலோகம் போனாரா என தேடினால் எலியா என்றொரு தீர்க்கதரிசி கர்மேல் என்ற மலையில் ஆசிரமம் அமைத்திருந்தார் எனவும் செத்தாரை எழுப்பினார் எனவும் ; குஸ்ட்டாரோகியன சிரியா நாட்டு படைத்தளபதியை குணமாக்கினார் எனவும் கடைசியாக உடலோடு பரலோகம் அழைக்க அக்கினிமயமான ரதங்களும் குதிரைகளும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வானத்திலிருந்து வந்தன எனவும் அப்படி ஏறிப்போகும் போது அவரது சால்வையை எலிஜா என்ற சீடர் மீது போட்டார் எனவும் ; பின்பு எலிஜாவும் நிறைய சாதித்தார் எனவும் எழுதப்பட்டிருந்தது
தியான நேரம் போக நான் அங்கொரு குடிலில் ஓய்வெடுக்க படுப்பேன் . அப்போது அங்கே சிவனடியார் போல ஒருவரும் மற்றொருவரும் ஓய்வெடுப்பது போல இருந்துகொண்டு உரையாடுவது போல சன்மார்க்ககிகள் கூட அறியாத பல விஷயங்களை வள்ளலாரைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள் . இப்படி இரண்டு நாளாளவும் எனக்கு தகவலாக தந்து எனக்குள் ஏற்றிக்கொண்டே இருந்தார்கள்
எதற்காக சமரச சத்திய என்று சங்கத்திற்கு பெயர் வைத்திருக்கிறீர்கள் என வள்ளலாரை கேட்டபோது தனக்கு பின்பு வருகிற தனித்தலைமைப்பதி சமரச சத்தியத்தை உங்களுக்கு அறிவிப்பார் .
இப்போது அதற்கான காலம் கணியாததால் தான் சொல்வதற்கில்லை எனவும் சமரச வேதாந்தி ஒருவர் வள்ளலாருக்கு பின்பு வருவார் எனவும் . தன்னை இன்னார் என நிரூபிக்க கலபட்டு ஐயா முதலானோரை உயிரோடு எழுப்பி வள்ளலார் கட்டியுள்ள எழுவார்மேடையில் சாட்சி சொல்ல வைப்பார்
அவரே வள்ளலாருக்கு பின்பு சமரச சத்திய சன்மார்க்க சங்கத்திற்கு தலைமையேற்று உலகம் சமரச சத்தியத்திற்குள் சுபீட்சம் பெருகும் .
சமரச வேதம் எப்படியிருக்கும் என மற்றவர் வினவ கீதை ; பைபிள் ,குரான் இவைகளுக்கிடையில் ஒன்றினால் ஒன்று செழுமையாகும்படியாக வசனங்கள் விரவி கிடப்பதாகவும் ; அந்த நபருக்கு அது தானாகவே வெளிப்படும் என்றும் சொல்லி முடித்துவிட்டு பின்பு அவர்கள் வரவில்லை
நானும் மூன்றாம் நாளில் எல்லோரும் சித்தி வளாகத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்க சத்திய ஞான சபையில் தியானித்து விட்டு ஊர் வந்து சேர்ந்தேன்
பின்பு முகநூலில் யாரோ கீதையின் ஒரு குறிப்பிட்ட சுலோகம் பற்றி விசாரம் செய்ய அதற்கு நான் விளக்கம் எழுத ; இப்படி தற்செயலாக கீதை மறுபொழிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது .
ஒரு சுலோகத்தை பற்றி எழுதும் முன்பு அது தொடர்பாக அனுபவம் காரியம் வாய்க்கும்
அப்புறம் எழுத உள்ளுணர்வு பல முறை வந்த பின்பே எழுதுவேன்
கொஞ்ச நாள் கழித்து அதை வாசித்தால் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருக்கும்
கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தில் கிறிஷ்ணர் ; அர்ச்சுணர் ; சுற்றிலும் இருந்த கொஞ்ச பேர் மட்டுமே கேட்டார்கள்
அதை ஞான திருஸ்ட்டியில் சஞ்சயர் கண்டு திருதராஷ்ட்ரருக்கு கூறினார்
அதை பிற்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து எழுதினார்கள்
ஆகவே அது எழுதப்படும் முன்பே எவ்வளவோ கலப்படம் அடைந்து விட்டது
அதனால் முழுமையான கீதை இப்போது இல்லை என்பதே உண்மை
அதற்கு விரிவுரை எழுதியவர்களோ அவரவர் சம்பிரதாயங்கள் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு அந்த பார்வையிலேயே எழுதியதாலும் அதிலும் முழுமையான விளக்கம் இல்லை
கடைசியாக பொழிப்புரை சொன்ன பிரபுபாதா கூட கிறிஷ்ணரே முழு முதல் கடவுள் என நிரூபிப்பதே வேலை என்பதுபோல மாஞ்சு மாஞ்சு பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்
மார்க்கங்கள் ; சமயங்கள் ; யார் கடவுள் என ஆராய்வது என்பதற்கு அப்பாற்படு கீதை யோகங்களை ஆழ்ந்து விளக்கும் இலக்கண நூல்
இன்று உலகத்தில் அப்பியாசத்தில் உள்ள ; அத்தோடு இனிமேல் வரப்போகிற எந்த யோகக்கலையையும் 18 வகையான யோகங்களுக்குள் கிறிஷ்ணர் வரையறுத்துள்ளார்
அந்தந்த யோகத்தின் அடிப்படை என்ன ; அதன் கூறுகள் என்ன ; சிறப்புற கடைபிடித்து தேர்ந்து முன்னேறி செல்ல என்ன வழி என மிக அருமையாக உபதேசித்துள்ளார்
18 வகை யோகங்களே 18 அத்தியாயங்கள்
அந்தந்த யோகங்களை அந்தந்த யோகங்களில் நின்று நான் உணர்ந்தது எதுவோ அது பயன்படக்கூடிய யாருக்கேனும் பயன்படட்டும் என்பதற்கு மேலாக இந்த எழுத்தாக்கத்தில் எதுவுமில்லை
சில சுலோகங்களுக்கு பொழிப்புரை எழுதப்பட்டால் ; இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என 10 நிமிடமாவது தியானித்து மறந்தும் விடுவேன்
மும்மத சமரச வேதம் என்ற ஒப்புவமையும் எனக்கு வெளியாக்கப்பட்டதும் ஆங்காங்கு ஒன்றை ஒன்று செழுமைப்படுத்துகிறது . வரப்போகிறவரைப்பற்றிய பல வெளிப்பாடுகள் ; அவருக்கு இறைவன் கொடுக்கப்போகிற வாரங்கள் ; அற்புத அடையாளங்கள் என பல விபரங்கள் உணர்ந்துகொண்டேன்
இறைவனால் முன் குறிக்கப்பட்ட அந்த மகோன்னதமான ஆத்மா வெளியரங்கமாக வேண்டுமானால் அதற்காக பிரார்திக்கிற ஆத்மாக்கள் சிலர் முன்பு வந்து பிரார்திப்பார்கள் ; பரப்புரையும் செய்வார்கள்
பலரால் எதிர்பார்க்கப்பட்ட பின்பே அவரது வருகை சம்பவிக்கும் என்பதால் அந்த முன்னோடிகளில் நான் ஒருவன் என்ற பொறுப்பு இறைவனாலேயே சுமத்தப்பட்டே இந்த திசையில் பயணித்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்
நிச்சயமாக இதற்கும் எனது சிற்றறிவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை
இறைவனால் சுமத்தப்பட்ட பொறுப்பு என்னை இயக்கியிருக்கிறது என்பதை தாழ்மையோடு இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்
ஒவ்வொரு சம்பிரதாயிகளும் அவரவர் சம்பிரதாயம் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு கீதையை விளக்கம் செய்தது போல மும்மத சமரச வேதம் என்ற அடிப்படையில் இறைவனால் உணர்த்துவிக்கப்பட்ட படியே வசனங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன

கீதா உபதேசத்திற்கான காரணிகள்




துவாபர யுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது

ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கென்று தகவமைக்கப்பட்ட மனித உடல் மற்றும் அதன் உள் கூறுகள் உள்ளன . துவாபர யுகத்துக்கென்று பிறக்க வைக்கப்பட அனைத்து ஆத்மாக்களும் ; அதே உடலுடன் கலியுகத்திற்குள் கடந்து செல்ல முடியாது

ஆத்மாக்கள் எதுவும் அழிவதில்லை ; உடல்தான் அழிக்கப்படுகிறதே தவிர புதிய உடலுடன் பூமியில் மறுபடி பிறப்படைக்கிறார்கள்

ஒரு சிலர் மட்டுமே யுக மாறுதலுக்குள் கடந்து செல்லும் தகவமைப்போடு பிறந்தவர்களாக இருந்திருப்பார்கள்

முதல் மனித சமூகமான கிருத யுகமும் ; அதன் லெமூரியா கண்டமும் ; 60 அடி உயரமான மனிதர்களும் ; டைனோசர் போன்ற உயரமான மிருகங்களும் கிருத யுகத்திற்கு பிறகு பூமியில் இல்லை

பூமி முழுதும் ஜலப்பிரளயத்தால் அழிக்கபட்டு ஒரு கும்பத்தில் அகத்தியரை கொண்டு சில உயிர்கள் காப்பாற்றப்பட்டன என தமிழக கும்பகோண கும்பமேழா கதையிலும் ; வட இந்தியாவில் சத்தியவரதன் கதையிலும் ஆப்ரகாமிய வேதங்களில் நோவா @ நூவ் நபி பேழையில் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வரலாறு சொல்லப்பட்டது

முதலாம் தமிழ்சங்கத்தில் ஆதம்நபி என்ற சிவனும் இறையனார் அகப்பொருள் என்ற கவிதை நூலை அரங்கேற்றியதும் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம்

தமிழகம் ; இமயமலை ; மக்கா அருகிலுள்ள அரபாத் புல்வெளி என பல்வேறு இடங்களில் சிவனார் வாழ்ந்து மனித குலத்தை ஆங்காங்கே உற்பத்தி செய்கதாக அறிகிறோம்

அதன்பின்னர் காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூரில் ஆதியோகியாக நீண்ட நெடிய தவம் இயற்றி அழிவுக்கேதுவான மனித சரீரத்தை மீண்டும் அழிவில்லாத ஒளி சரீரமாக மாற்றினார் என்பதை உலகின் முதல் வைரவர் என கோவிலில் ஸ்தலவரலாறு உள்ளது . அருகில் வைரவன்பட்டியில் வைரவனார் கோவிலும் ; வளரொளி நாதர் என்ற ஆத்ம லிங்கமும் ஆவணங்களாகும்

அப்படி மீண்டும் தேவர் என்ற தன்மையாகி சிவனார் பரலோகம் ஏகி இப்போது ருத்திர பதவி அதாவது ஆர்க் ஏஞ்சல் மிகாயேல் ஆக உள்ளார்

இரண்டாம் யுகம் ; தமிழ்சங்கம் பூம்புகார் ; ஆதிகடவூர் உள்ளிட்ட கபாடபுரம் ஆகும் . இங்கு அரசாண்ட சோழர்கள் ராமரின் அதே குலத்தை சேர்ந்தவர்கள்

மனுநீதி சோழனின் குறிப்பில் அவன் ரகுவம்ஸத்தில் வந்தவன் என்ற குறிப்பு உண்டு . எப்படி சிவனார் பூமியில் மூன்று இடங்களில் மனித குலத்தை கிருத யுகத்தில் தோற்றுவித்தாரோ ; அதுபோல திரேதா யுகம் என்ற இரண்டாம் யுகத்தின் வம்சம் ரகுவம்ஸம் ஆகும்

முதலாம் யுக முடிவில் ஜலப்பிரளயத்தின் மூலமாக பேரழிவு சம்பவித்தே இரண்டாம் யுகம் துவங்கியது .

ஆனால் அந்த பேரழிவினைப்பார்த்து இறைவனே மனஸ்தாபத்திற்குள்ளானார் என தவ்ராத்ல் இறைவார்த்தை வந்துள்ளது


ஆதியாகமம் 9 : 9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,

10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

11. இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.


இப்படி யுகமாறுதலின் போது இனிமேல் பிரளயம் இல்லையே தவிர ; அதற்கொப்ப சிறு சிறு நிகழ்வுகள் ; மனித யுத்தகங்களால் சாவுக்கு பிறகே யுக மாறுதல் சம்பவிக்கிறது

இரண்டாம் திரேதா யுகத்தில் ராமருக்கும் லங்கேஸ்வரனுக்கும் யுத்தத்தில் பேரழிவு உண்டானது

மூன்றாம் துவாபர யுகத்தில் மகாபாரத யுத்தத்தில் உலகம் முழுவதிலும் பங்கெடுத்து பலர் மாண்டனர்

அந்த யுத்தத்தை முன்னெடுக்க வைக்க நரநாராயனர்களான யுகபுருஷன் ஸ்ரீகிறிஷ்ணரும் அர்ச்சுனரும் அவதரித்து இருந்தனர் . கூடவே உயிர்களை அழிக்கும் காளியின் அம்சமான திரெவ்பதியும் அவதரித்து இருந்தனர் .

அபிராமி அந்தாதி
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.


ருத்ரணனின் இணைவியான கொற்றவை ; சுடுகாடு காளி என்றும் சொல்வார்கள் ; அழிவின் தேவர் இவர் . யுக மாறுதலின் போது இவரின் செயல்பாடும் இருக்கும் .

இப்படி மூன்றாம் யுக முடிவிற்காக உலகிற்க்கு வந்தவர்களால் மகாபாரத யுத்தம் முன்னெடுக்கப்பட்டது .

ஆனாலும் அது ஏதோ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்குமான பங்காளி சண்டை என்பதுபோல மேற்போக்காக இருந்தாலும் ; இந்த யுத்தத்தில் உலகம் முழுவதும் இருந்த அரசர்கள் தங்கள் தங்கள் சேனையுடன் திரளாக இரண்டு அணிகளிலும் எதற்காக திரண்டார்கள் ?

இதுவே இறை சித்தம் என்பது ; யுக அழிவு என்பது

இப்போதும் கூட உலகம் நான்காம் கலியுகத்திலிருந்து சத்திய யுகத்திற்குள்ளாக பிரவேசிக்கப்போகிறது . இதற்கான ஒரு பேரழிவாகவே கொரோனா விஷ ஜுரம் பாதித்து வருகிறது .

ஆனாலும் அருளாளர்கள் பலர் பிறந்து இடையறாது மன்றாடி பிரார்தித்து வருவதால் அழிவு குறைவாகவும் ; வியாதி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தேறியோர் ; தொற்று பாதிப்பு வெளியே தெரியாமலேயே தேறியோர் என ஒரு புதிய பிளாஸ்மா ரத்தத்தில் ஊறி வருகிறது .

இது மனித சரீரத்தை சத்திய யுகத்திற்குள் கொண்டு செல்வதற்கே தகுதி உண்டாக்குகிறது

ஆனாலும் சிலர் அழிவுக்குள்ளாகின்றனர் . இதன் தாத்பர்யம் இறைவனே அறிவார் . ஆனாலும் மனதிற்குள்ளாக இறைவனை நோக்கிய பிரார்த்தனை உள்ளோரே ; நற்கருமங்கள் புரிவோரே புண்ணியங்கள் உள்ளோரே தப்பித்தும் வருகின்றனர்

அப்படி துவாபர யுக முடிவுக்கான யுத்தமாக குருஷேத்திரத்தில் உலகின் 20 கோடி நபர்கள் அழிவுக்குள்ளாகினார் என்கிறார்கள் .

ந்த யுத்தத்திற்காக இரு தரப்பாரும் கூடியபிறகு மாமுனிவர் வியாசர் கண்ணில்லாத அரசன் திருதராஸ்ட்டரருக்கு போர்க்கள சம்பவங்களை அப்படியே சினிமா பார்ப்பதுபோல போல பார்த்து அறிவிக்க ஞான திருஸ்ட்டியை அவரது மந்திரி ஸஞ்சயருக்கு அருளினார் . அதன் வாயிலாக போர்க்கள சம்பவங்களை உடனுக்குடனேயே லைவ் ஆக பார்த்தார்கள் .

கீதை துவக்க நிகழ்வுகள்

கீதை 1 : 1 திருதராஷ்ட்ரர் கேட்டார் ; ஸஞ்சயா ! தர்மபூமியான குருஷேத்ரத்தில் ஒருங்கே கூடி யுத்தம் செய்கிறவ்ர்களான என்னவர்களும் பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள் ?;

கீதை 1 : 2 ஸஞ்சயன் கூறினார் : ராஜா துரியோதனன் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த பாண்டவர் படையை பார்தததும் ஆச்சார்யார் துரோணரை அணுகி இந்த வார்த்தையை கூறலானார்

கீதை 1 : 3 ஆச்சார்யரே ! உங்களது புத்திசாலியான சீடனும் துருபதனின் குமாரனுமான திருஸ்ட்டதும்ணனால் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவர்களின் சேனையை பாருங்கள்

கீதை 1 : 4 - 6 அந்தப்படையில் அதிரதர்கள் எனப்பட்ட பெரிய வில்லாளிகள் ; யுத்தத்தில் பீமனுக்கும் அர்ச்சுணனுக்கும் ;இணையான வீரர்கள் ; சாத்யகி , விராடன் , மகாராஜா துருபதன் , திருஷ்ட்டகேது , செகீதான் , காசிராஜன் , புருஜீத் , குந்திபோஜன் , சைப்யன் , யூதாமன்யு , உத்தமெளஜா , சுபத்ரையின் குமாரன் அபிமன்யு , திரேவ்பதியின் குமாரர்கள் ஐவர் இருக்கிறார்கள் .

கீதை 1 : 7 அந்தணர்களில் சிறந்தவரே ! அவ்வாறே நமது அணியிலும் யாரெல்லாம் பிரதான வீரர்களோ ; அதிரதர்களோ அவர்களை தேர்ந்து கொள்ளுங்கள் ; என்னுடைய படைத்தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களின் கவணத்திற்கு கொண்டுவருகிறேன் .

கீதை 1 : 8 யுத்தத்தில் தேர்ந்தவரான தாங்களும் , பாட்டனார் பீஷ்மரும் , கர்ணனும் , கிருபாச்சார்யாரும் , அசுவாத்தமானும் , விகர்ணனும் , பூரிசிரவஸ்ஸும்

கீதை 1 : 9 மேலும் உயிராசையை எனக்காக விட்டவர்களான வேறு பல சூரவீரர்களும் தங்களது ஆயுதங்களுடன் தயாராகவே நிற்கிறார்கள்

கீதை 1 : 10 பாட்டனார் பீஷ்மரால் நடத்தப்படும் நமது படை எந்த வகையிலும் எதிரிகளால் வெல்லப்பட முடியாதது . ஆனால் பீமானால் பாதுகாக்கப்படும் அந்தப்படை நம்மால் எளிதாக வெல்லப்பட கூடியதே .

கெளரவர் படையின் சேனாதிபதியான பீஷ்மர் அணிவகுத்த சேனையைப்பற்றி ; தன்னால் அவரிடம் பெருமை பேச முடியாது என்பதாலும் ; ராஜா என்கிற முறையில் தனது மேலாண்மை இருப்பதாலும் ; துரியோதனன் தனது கருத்தை துரோணரிடம் போய் தெரிவிக்கிறான் . இது பீஷ்மரிடம் சேர்க்கப்படும் என்ற வகையில்

தனது படையினர் பீஷ்மர் நடத்துதலில் இருப்பதால் ; தங்களை வெல்வது கடினம் என சுய நம்பிக்கை கொள்கிறான் ; ஆனால் எதிராளிகள் யுகபுருஷன் ஸ்ரீகிறிஷ்ணரின் நடுத்துதலில் இருப்பார்கள் என ஆன்மீகரீதியாக அவனால் கணக்கீடு செய்யமுடியவில்லை

அதனால் பாண்டவ சேனைக்கு பீமனே பெரும் பலம் என நம்புகிறான்

எதிராளிகளை பற்றிய சரியான கணிப்பு இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம் .

ஸ்ரீகிறிஷ்ணர் ஒன்று எனது படையினர் அனைவரும் வேண்டுமா அல்லது ஆயுதம் ஏந்தாத தான் வேண்டுமா எனக்கேட்டபோது அர்ச்சுணன் எங்கே படை வீரர்களை கேட்டுவிடுவானோ என பயந்து ; அவன் ஸ்ரீகிறிஷ்ணர் வேண்டும் என சரியான தேர்வு செய்தபோதும் கூட ஆகா அதிர்ஷ்டம் பெரும் படை கிடைத்தது என மனித பலத்தை நம்பியவன் துரியோதனன்

மனித பலம் ; மனித முயற்சி இறைவனின் சக்திக்கு முன்பு தூசு .

அதே தவறை எதிரணியில் தேரோட்டியாகவே நின்றாலும் யுகபுருஷன் நிற்கிறார் ; நிலைமைகளை அவ்வப்போது திசை திருப்பிவிடக் கூடியவர் என்ற உண்மை துரியோதனனுக்கு உணரவே இல்லை .

ஆனால் போர்க்கள ரீதியான ஒரு பின்னடைவை சரி செய்ய முயல்கிறான்

அது ஏதென்றால் சிகண்டி ஆணாக மாறியிருந்தாலும் ; பெண்ணாக பிறந்தவள் என்பதாலும் ; பீஷ்மரை கொல்லுவதற்கே வரம் பெற்று பிறந்தவள் என்பதாலும் ; அவள் தன்நெதிரே வந்தால் ஆயுதத்தை துறந்து விடுவேன் என பீஷ்மர் ஏற்கனவே அறிவித்து விட்டார்

ஆகவே எக்காரணம் கொண்டும் சிகண்டி பீஷ்மர் முன்பு வந்துவிடாதபடி காப்பது தனது தரப்பு வீரகளின் கடமை என எச்சரிக்கை செய்கிறான்

கீதை 1 : 11 யுத்தகளத்தில் அவரவர் போர் முனையில் யுத்தம் செய்தாலும் ; பாட்டனார் பீஷ்மரை நீங்கள் அனைவரும் சுற்றியிருந்து காப்பாற்றுங்கள் .

கீதை 1 : 12 அப்போது குரு வம்சத்தில் முதியவரும் ; மிகுந்த பிர்ஸ்தாபம் உடையவருமான பீஷ்மர் சிங்க கர்ஜ்ஜனை போன்று சங்கநாதம் எழுப்பியதால் மகிழ்ந்தான் .

கீதை 1 : 13 உடனே பற்பலரால் சங்குகளும் பேரிகைகளும் தாரை தப்பட்டம் கொம்புகளும் ஒருங்கே முழங்கின . அந்த ஒலி பயங்கரமாக இருந்தது .

கீதை 1 : 14 இதன் பிறகு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்டிருந்த மகிமையான தேரில் அமர்ந்திருந்த மாதவனும் பின்பு அர்ச்சுணனும் திவ்யமான தங்கள் சங்குகளை முழங்கினார்கள்

மகிமையான தேர் என்று ஏன் சுட்டப்பட்டது என்றால் யுக மாறுதலுக்காக பல்லாயிரம் பேர்களை அழிக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அந்த தேரில் கொடியில் ஸ்ரீஅனுமானே அமர்ந்திருந்தார் என்ற உண்மை சஞ்சயனுக்கும் தெரிந்ததால் கூறப்பட்டது

கீதை 1 : 15 ஸ்ரீகிறிஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினார் . பின்பு அர்ச்சுனன் தேவதத்தம் ஊதினார் . அவ்வாறே பீமன் பெளண்டீரம் ஊதினான்

கீதை 1 : 16 அவ்வாறே யுதிஷ்ட்ரர் அநந்தவியத்தையும் ,நகுலன் சுகோஷா வையும் சகாதேவன் மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கினார்கள்

இங்கு இறைநெறி உணர்ந்த மாந்தர்கள் செய்கை வெளியாக்கப்ப்டுகிறது . முதலில் குரு எடுத்துக்கொடுத்த பிறகே பின்பற்றி செல்லவேண்டும் என்ற நியதி கடைபிடிக்கப்பட்டது . அதுவே நாம் யாரை முன்னிறுத்துகிறோம் என்ற மகப்பெரிய ஆயுதமாகும் .

துரியோதணன் மானுஷிகமாக பீமனை பெரிய ஆளாக கணக்கு போட்டால் ; பாண்டவர்கள் ஆயுதம் ஏந்தாத ஸ்ரீகிறிஷ்னரை இங்கு முன்னிலைப்படுத்தி ; தாங்கள் அவரை சரணடைந்து இருப்பதை ; யார் யுத்தத்தை வழிநடத்தப்போகிறார் என்பதை அறிவித்துவிட்டார்கள்

கீதை 1 : 19 அந்த தெய்வீக ஒலி ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்தது .கெளரவ அணியினரின் இதயங்களில் கலக்கத்தை உண்டாக்கியது .

ஏனெனில் யுகபுருஷன் ; நாராயணன் என்ற அதிதேவர் காப்ரியீலின் அவதாரம் . ஆகவே அவர் சங்கநாதம் முழங்கியபோது ; அந்த சத்தம் என்பது அருவ இறைவனின் முதலாவது சத்தத்திற்கு ஒப்பு ஆனது . எனவே அண்டசராசரங்களும் அதற்கு ஒப்ப அதிர்ந்தன . தேவர்களும் சங்கநாதம் செய்தார்கள் . ஆகவேதான் கெளரவ சேனை முழங்கியபோது ஆகாயத்தில் எதிரொலிக்காத முழக்கம் ; பாண்டவர் சேனை முழங்கியபோது தேவர்களாலும் பலமடைந்தது . அதனால் அசுரர்களும் கெளரவ அணியினரும் கலக்கமடைந்தனர் . இது அவர்களின் இதயங்களை பலகீனப்படுத்தியதால் அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டது .

கீதை 1 : 20 - 22 இதன்பின்னர் அனுமக்கொடியை தேரிலே உடைய அர்ச்சுணன் ; அணிவகுத்து போர் புரிய தயாராக இருந்த கெளரவ அணியினரை பார்க்க விரும்பி ‘அச்சுதா ! ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவாக நிறுத்துங்களேன் ; இந்த யுத்தத்தில் எவரொருவருடன் நான் போரிட நெருமோ ; அதற்காக அணிவகுத்து நிற்கும் யாவரையும் நான் பார்க்கும்படியாக ரதத்தை நடுவே நிறுத்துங்களேன் ‘ என்று வில்லை நிமிர்த்திக்கொண்டு கூறினான்

இங்கு ஒரு சிறந்த போர் வீரனின் லட்சணம் சுட்டப்படுகிறது . எதிரிகளை சரியாக கணிக்கிறவனே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் . தனது வீரத்தை பலத்தை நம்பி மட்டுமே முரட்டுத்தனமாக யுத்தம் செய்வது விவேகமல்ல . எதிராளிகளை கவனிக்க வேண்டும் . அவர்களின் சாதக பாதக அம்சங்களை நிதானிக்க வேண்டும்

ஆகவே அவர்களுக்கு எதிரே பிரயாணிக்காமல் ரதத்தை இடையாக பக்கவாட்டில் நடத்தும்படியாக வேண்டினார் அர்ச்சுனன்

அப்படி இடையாக பயணிக்கும் போது ஏதேனும் பேச்சுவார்த்தைகள் முன்மொழியப்படலாம் என்பதால் யுத்தம் தொடங்க மாட்டார்கள் .

மேலும் யுகபுருஷன் அங்கிருந்ததால் யோகமாயையால் கட்டப்பட்டு இரு தரப்பாரும் செயலற்றவராக ஸ்தம்பித்தனர்

யோகம் 1: விசாரணை யோகம் !!!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 1: 22 அர்ச்சுணண் கூறினான் : அழிவற்றவரே ! யுத்தம் செய்ய விரும்பி இங்கு வந்திருப்போரை நான் அறிந்து கொள்ளும்படியும் ; கடுமையான யுத்த நிகழ்வில் பங்கெடுப்போர்களின் திறத்தை நான் கணிக்கும் படியும் ரதத்தை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக நிருத்துவீராக !

கீதை 1: 23 தீயவர்களான திருதராட்டர மகன்களை திருப்திபடுத்தும் நோக்கத்துடன் யுத்தம் புரிய வந்திருப்போர்களை நான் பார்க்கட்டும் !

கீதை 1: 24 இவ்வாறு அர்ச்சுணன் கூறக்கேட்டதும் கிரிஸ்ணர் தேரை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக கொணர்ந்தார் !!

கீதை 1: 25 பீஸ்மர் , துரோணர் மற்றும் உலக அரசுகளின் தலைவர்களெல்லாம் கூடியிருப்பதை காட்டி ``பார்த்தா ! குருவம்சத்தினர் எல்லோரும் கூடியிருப்பதை பார் !!`` என்றார் கிரிஸ்ணர் !!

கீதை 1: 26 அங்கு அர்ச்சுணன் சேனைகளின் இருபக்கத்திலும் தந்தைமார்களும் ; பாட்டண்மார்களும் ;ஆசிரியர்களும் ; மைத்துனர்களும் ; சகோதரர்களும் ; மகன்களும் ; பேரர்களும் ; மாமன்மார்களும் மற்றும் நலவிரும்பிகளும் குழுமியிருப்பதை கண்டான் !!

கீதை 1: 27 குந்தியின் மகன் அனைத்து தரமான உறவிணர்களையும் ; நண்பர்களையும் கண்ட போது கவிரக்கத்தால் நிறைந்து புலம்பத்தொடங்கினான் !!

கீதை 1: 28 எனதருமை கிரிஸ்ணா ! போர்க்குணத்தால் உந்தப்பட்டுள்ள எனது உறவிணர்களையும் நண்பர்களையும் காணும் போது என் நரம்பு முடிச்சுகளும் அதிர்ந்து ; என் வாய் திக்குகிறது !

கீதை 1: 29 என் முழு உடம்பும் ஸ்தம்பித்து ; மயிர்க்கால்கள் கூச்செரிந்து ; என் காண்டீபம் கைநழுவி போகிறது ! ஐயோ !என் மேனியெங்கும் காந்துகிறதே !!

கீதை 1: 30 என் புத்தி பேதலித்து நிலை தடுமாறுகிறேன் ! கெட்டவையே நடக்க போவதை உணர்கிறேன் ! அசுரர்களை அழிக்கிறவரே ! இனிமேலும் இங்கிருக்க என்னால் முடியாது !!

கீதை 1:31 எனதருமை கிரிஸ்ணா ! எனது சொந்தபந்தங்களை கொல்வதால் எவ்வாறு ஏதாகிலும் நன்மை விளையக்கூடுமோ என தெறியவில்லை ? அல்லது அந்த வெற்றியால் விளையும் அரசாட்சியிலும் சுகபோகங்களிலும் எனக்கு விருப்பமில்லை !!

கீதை 1:32 யாருக்காக அரசாட்சியையும் சுகபோகங்களையும் தேடுகிறோமோ அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ அவர்களெல்லாம் இந்த யுத்தகளத்தில் அணிவகுக்கும் தேவை என்ன ?

கீதை 1:33 மதுசூதனா ! அனைத்து ஆசான்கள் ; தந்தையர் ; பிள்ளைகள் ;பாட்டணார்கள் 'மைத்துனர்கள் ;மாமன்மார்கள் ; பேரன்மார்கள் சகோதரர்கள் மற்றும் அனைத்து உறவிணர்களும் தமது உயிரையும் உடமைகளையும் இழக்க சித்தமானவர்களாய் என்முன்னே நிற்கும்போது ; ஒருவேலை அவர்கள் என்னை கொல்வதாகவே இருந்தாலும் ஏன் நான் அவர்களை கொல்லவேண்டும் ?

கீதை 1:34 உயிரிணங்களை காக்கிறவரே ! இந்த பூவுலகிற்கு பகரமாக மூவுலகங்களையும் கொடுப்பதாகவே இருந்தாலும்கூட நான் அவரகளுடன் சண்டையிட தயாராயில்லை !

கீதை 1:35 திருதராட்டரரின் மக்களை கொல்வதால் என்ன மகிழ்சி கிட்டபோகிறது ?

கீதை 1:36 இத்தகைய எதிராளிகளை அழிப்பதால் பாவமே நம்மை மேற்கொள்ளும் ! எனவே திருதராட்டரரின் மக்களையும் சொந்தபந்தங்களையும் கொல்லுவது நன்மைக்கு ஏதுவானதல்ல !

கீதை 1:37 கிரிஸ்ணா ! நம் சொந்தபந்தங்களை கொண்ற பிறகு எவ்வாறு மகிழ்சியாக இருக்கமுடியும் ? அல்லது என்ன ஆதாயம் பெறமுடியும் ?

கீதை 1:38 ஜனார்த்தனா ! பேராசையால் மேற்கொள்ளப்பட்ட இதயத்தால் இந்தமனிதர்கள் நண்பர்களுடன் சண்டையிடுவதையும் ; குடும்பதார்களை அழிப்பதையும் சரியெனவே கருதினாலும் குடும்பத்தை அழிப்பதை குற்றமென கருதும் நம்மைப்போன்றோர் ஏன் இந்த பாவகாரியங்களில் ஈடுபடவேண்டும் ?

கீதை 1:39 வம்சங்கள் அழிவதால் தெய்வீகத்தால் கட்டபடும் குடும்பமாண்புகள் சீரழிகிண்றன ! அதனால் எஞ்சிய மனிதர்களோ நெறிபிறழ்ந்தவர்களாய் மாறுவர் !!

கீதை 1:40 எப்போது குடும்பத்தில் நெறிபிறழ்ச்சி வேரூண்றுகிறதோ அப்போது பெண்கள் சீர்கேட்டை அடைவர் ! பெண்மையின் தரம் தாழும்போது முறண்பாடான சந்ததி உருவாகும் !!

கீதை 1:41 தரமற்ற சந்ததி பெருகும் போது குடும்ப வாழ்வு நரகவாழ்வாய் மாறிப்போகும் ! அதற்கு காரணமானவர்களையும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் ! பின் சந்ததியினரின் புண்ணியகர்மங்கள் எழும்பாததால் முன்னோர்களின் ஆத்துமாக்களும் உய்விப்பார் இன்றி கீழ்நிலையடையும் !!

கீதை 1:42 அனைத்து சமூக மறுமலர்ச்சி மற்றும் குடும்ப நல காரியங்களும் வீணாகப்போகும் !!

கீதை 1:43 கிரிஸ்ணா ! சீடர் பரம்பரியத்திடம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் !`` யார் குடும்ப மாண்புகளை குலைத்தார்களோ அவர்கள் எப்போதும் நித்திய நரகத்தையே அடைவர் !!`` என்று !!

கீதை 1:44 மகத்தான பாவகாரியங்களை செய்ய நாம் தயராவது என்ன விந்தை ? அரச சுகபோகங்களை சுகிக்க சொந்தபந்தங்களையே கொல்ல தயாராகிறோமே ??

கீதை 1:45 யுத்தகளத்தில் நிராயுதபானியாகவும் எதிர்த்து தடுக்காமலும் நான் இருக்கும் போதே திருதராட்டிர மக்களின் ஆயுதங்களால் கொல்லப்படுவதே எனக்கு மேலாக தெறிகிறது !!

கீதை 1:46 இவ்வாறு பேசிய அர்ச்சுணண் துக்கம் மேவியதால் வில்லையும் அம்புகளையும் எறிந்து விட்டு சோர்ந்து போய் ரதத்தில் அமர்ந்து விட்டான் !!

கீதை 2:1 சஞ்சயன் கூறினான் :புத்தி பேதலித்து பரிதாபத்தால் நிறைந்து கண்ணீரும் கம்பலையுமாய் தவிக்கும் அர்ச்சுணனை பார்த்து இறைதூதர் கிரிஸ்ணர் பின்வருமாறு உபதேசித்தார் :

கீதை 2:2 எனதருமை அர்ச்சுணா ! இந்த மனக்கலக்கம் எவ்வாறு உன் மேல் வந்தது ? வாழ்வின் அர்த்தம் உணர்ந்த மனிதனுக்கு இவை தகுதியல்லவே ! மறுமைக்கும் பரலோகத்திற்கும் பாத்திரனாவதற்கு பதில் அவமானத்தையல்லவோ கொண்டு வந்து சேர்க்கும் ?

கீதை 2:3 ப்ரதாவின் மகனே ! தகுதியை குறைக்கும் பலவீணத்திற்கு இடம் கொடாதே ! எதிரிகளை சுக்குநூறாக்கும் உனக்கு இது ஏற்றதல்ல ! சிறுமையான மனத்தளர்ச்சியை துடைதெறிந்து விட்டு விளித்தெழுவாயாக !!

கீதை 2:4அர்ச்சுணன் கூறினான் : மாயைகளை கலைகிறவரே ! தீமைகளை அழிக்கிறவரே ! மனதால் மதிக்கிற பீஸ்மரையும் துரோணரையும் எவ்வாறு அம்புகளால் தாக்குவேன் ?

கீதை 2:5 விலைமதிப்பில்லாத எனது ஆசாண்களான மகத்துவமிக்கவர்களை கொன்று என்னை நிலைநிறுத்தி கொள்வதை விட பிச்சை எடுத்து உயிர் வழ்வது மேலல்லவா ? உலகை ஆளும் நோக்கத்தை விட அவர்கள் அருமையானவர்களல்லவா ? அவர்கள் கொல்லப்பட்டால் நான் அடையும் இன்பங்கள் யாவும் அவர்கள் ரத்தம் தோய்ந்ததாய் தோன்றாதா ?

கீதை 2:6 அவர்களை வெற்றி கொள்வதும் அல்லது அவர்களால் வெற்றிகொள்ளப்படுவதும் என்ன சிறப்பை கொண்டுவந்து விடும் ? திருதுராஸ்ட்டரின் புதல்வர்களை கொண்று விட்டு நாம் ஏன் வாழவேண்டும் ? யாரை நாம் கொல்ல விரும்பமாட்டோமோ அவர்களெல்லாம் நமக்கு எதிரே யுத்தத்திற்கு நிற்கிறார்களே ?

கீதை 2:7 என்ன செய்வது என உணரமுடியாத அளவு குழப்பமாக உள்ளது ! நிம்மதியை இழந்து பலகீணத்தால் தவிக்கிறேன் ! இந்த நிலையில் எது சிறந்தது என்பதைப்பற்றி எனக்கு உணர்த்தும் படி வேண்டுகிறேன் !ஏனெனில் நான் உமது சீடன் : உம்மை சரணடைந்த ஆத்துமாக்களில் ஒருவன் ! எனக்கு வழிகாட்டுவீராக !!

கீதை 2:8 ஐம்புலன்களையும் வரழசெய்யும் துக்கத்தை விரட்டும் வழியின்றி தவிக்கிறேன் ! சகல  ஸவ்பாக்கியங்கள் நிறைந்த ஈடுஇணையற்ற அரசாட்சியை இப்பூமியில் நான் ஸ்தாபித்து தேவதூதருக்கொத்த மாட்சிமையை அடைந்தாலும் இந்த துக்கத்தை மறக்க இயலாதே !!

கீதை 2:9 இவ்வாறு புலம்பிய அர்ச்சுணன் கூறினான் : ``கிரிஸ்ணா !கோவிந்தா ! என்னால் போர் செய்யவே முடியாது !!``

யோகம் 2 சாங்கிய யோகம் !

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 2:14 ஓ!குந்தியின் மகனே!பருவ காலங்கள் எப்படி தோன்றிமறைகிறதோ அப்படியே இன்பமும் துன்பமும் தோன்றிமறைகிறது! மாறிமாறி வருகிறது!இது புலன்களின் உணர்ச்சியினால் நிலையானது போல தெரிகிறது!இவைகளால் பாதிப்படையாத-- புலன்களை கடந்த மன நிலையை கற்றுக்கொள்ளவேண்டும்!

2:15 மனிதர்களில் சிறந்தவனே!யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிப்படையாத மனநிலையை பெறுகிறானோ,மன சமநிலையை அடைகிறானோ அவனே இறைவனை நெருங்க தகுதி அடைகிறான்


உலகபந்தங்கள் துன்பதுயரங்களிலிருந்து விடுபட்டு ஆத்துமசுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமா?

வெற்றிகளில் துள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும்

வெற்றிக்கு  இறைவக்கு நன்றி செலுத்திவிட்டு நகன்றுவிடவேண்டும் வெற்றியில் தேங்கிநின்று கொண்டாட நம் மனம் பழகும்போது தோல்வியில் தேங்கிநின்று துயறத்திலும் களிவிறக்கம்படவும் தொடங்கிவிடும் கடவுளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்

வெற்றியில் நன்றி தெறிவித்த பக்தனுக்கு துன்பத்தில் உதவவேண்டிய நெருக்கடி  
இறைவக்கும் உண்டாகிவிடுகிறது

நாம் மனச்சமநிலை அடைவது நம் பக்தியின் நிறைவுக்கு ஒரு அடையாளமாகும்

கோடையின் வெப்பம் நம்மை வாட்டி வதக்கும் போது அது நிலையானது போல தெரிகிறது!பனியில் நாம் உறைந்து போய் விடுவோம் போல உணர்கிறோம்!ஆனால் அது உண்மையல்ல!

நம் புலன்கள் நுகர்வுணர்ச்சிக்கு நம் சக்தியை மனமானது செலவளித்துக்கொண்டே இருப்பதால் நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்!அதை உணர்கிற நமது மனம் தான் நம் சோர்வுக்கு காரணமே தவிற புற காரணிகள் நம்மை வருத்துவதில்லை!

அது சில நாளில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை-அறிவை இழந்து நம் மனமானது விரக்தியில் ஒடுங்குகிறது!மேலும் இந்த மனமானது தான் ஆத்துமா என்பதை மறந்து சரீரத்தின் புலன் உணர்வுகளுக்கு மதிமயங்கி தன்னை சரீரமாகவே நினைத்துக்கொண்டுள்ளது!

அழிவுள்ள சரீரத்தில் வாசம் செய்கிற அழிவற்ற ஆத்துமா நான் என்கிற மெய்யறிவு அதற்கு மங்கி தன் பலமறியாமல் --ஆத்துமபலம் இழந்து சரீரத்திற்க்கு அடிமையாகி உலக சுகதுக்கங்கள் என்கிற குட்டையில் உழண்று கொண்டுள்ளது!

சரீரம் அழிவுள்ளது ஆனால் ஆத்துமாவோ நியாயத்தீர்ப்பு நாள் வரை அழிவற்றது!உலகில் நம் சரீரத்தை அழிக்க பலவற்றால் முடியலாம்!நாம் பயப்பட வேண்டியுள்ளது!

உண்மை யாதெணில் 
இறைவன் அணுமதித்தாலொழிய நம் சரீரத்தை யாராலும் அழிக்க முடியாது;ஆனால் நம் ஆத்துமாவை  இறைவனைத்தவிற யாராலும் அழிக்கவே முடியாது!

மத்தேயு10:28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவை நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். -இயேசு

ஆத்துமா அழிவற்றது என்கிற மெய்யறிவும் அதன் ஆத்துமபலத்தை பெருக்கி சரீர ஆளுகையிலிருந்து விடுபடுவதும் கடவுளை நெறுங்கி செல்வதற்க்கு பாதையாகும்!


கீதை 2:58  ஆமை தன் அவயங்களை தன் ஓட்டிற்க்குள் இழுத்துக்கொள்வதைப்போல; யார் தன் சரீர புலன்களை, உணர்வுகளை தூண்டும் உலக காரணிகளிலிருந்து விவித்துக்கொள்ளுகிறானோ அவனே மெய்யறிவில் நிலைத்தவனாவான்!


ஆமையானது ஓட்டிற்குள் வாசம் செய்கிறது அந்த ஓட்டை சுமந்து திரிகிறது பார்ப்போர் அந்த ஓடு தான் ஆமை என நினைக்கின்றனர்!ஆனால் அந்த ஓடு அல்ல அந்த ஓட்டிற்க்குள் ஆமை இருக்கிறது!அது சாதகமான சூழ்னிலையில் ஓட்டிலிருந்து தன் அவயங்களை நீட்டி இந்த உலகில் இயங்குகிறது!சாதகமற்ற சூழ்னிலையில் ஓட்டிற்க்குள் தன்னை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளுகிறது

உலகத்திடமிருந்து தன்னை விவித்துக்கொள்ளுகிறது!அந்த ஆமையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் படி இறைதூதர் கிருஸ்ணர் வழிகாட்டுகிறார்!

அழிவற்ற ஆத்துமா நான் என்பதை உணர்ந்து அழிவுள்ள சரீரத்தில் சில நாள் வாசமாயிருக்கிறோம்;அது நமது ஓடே தவிற சரீரமும் சரீரத்தின் மூலம் நம்மை மயக்குகிற உலக மாயைகளும் இச்சைகளும் பந்தங்களும் நாமல்ல என தெளியவேண்டும்

புற உலக காரணிகள் எதுவும் நம் ஆத்துமாவை நாம் அதற்கு இடம்கொடுத்தாலொழிய நம்மை மயக்கவும் எதுவும் செய்ய சக்தியற்றவை!


கீதை 2:23 இந்த உலகத்தின் எந்த கருவியாலும் ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டவே முடியாது;தீயினால் எரிக்க முடியாது அல்லது தண்ணீரில் கறைக்கமுடியாது;பெருங்காற்றினாலும் துகள்துகளாய் பறக்கடிக்க முடியாது!


கடவுள் உருவாக்கிய பரமாத்மா--அவரில் கடவுளால் உருவாக்க பட்டு அவரால் மட்டுமே அழிக்கபடக்கூடிய நான் ஜீவாத்மா என்பதை உணர்ந்து அவரோடு பக்தி பூண்ட மனிதன்--தன்னை உணர்ந்தவன் இந்த சரீரத்தை அடக்க கற்றுக்கொள்ளுகிறான்!

உலகத்தின் அதிபதியாகிய அசுரன் சரீரத்தை மயக்கி ஆத்துமாவை ஆள முயற்ச்சிக்கிறான்!ஆத்துமா மெய்யறிவிலும் கடவுளிலும் நிலைத்து பேரின்பத்தில் திளைத்து பழகிவிட்டால் அசுரனின் சிற்றின்ப மாயங்கள் எடுபடாமல் போய் விடும்!

நிறை பக்தன் சரீரத்தை அடக்கி வெற்றி பெருகிறான்!அல்லது சரீரத்தை கடந்தவனாகிறான்! இங்கு சரீரத்தை மையமாக வைத்து `யுத்தகளம்` ஒன்று இறுதி நாள் வரை உள்ளது என்பது தான் `குருஸேத்திர யுத்தம்` என உருவக படுத்த படுகிறது!

யுத்த களத்தில் எதிரிகள் அசுரனும் அவனின் உலக மாயைகள் --இன்பதுன்பம்,பட்டம்பதவி,அதிகாரம்ஆணவம்,ஆசைதேவைகள்,அன்புவெறுப்பு என சரீரத்தை(தேரை) கவர்ந்து இழுத்து அதன் மூலம் ஆத்துமாவை ஆளுகை செய்வது அசுரனின் அணி!

தேரில் வீற்றிருக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா அந்த தேரை இறைதூதனாகிய கிருஸ்ணரிடம் வழி நடத்த ஒப்படைத்தால் இறைதூதர் கடவுளின் வேதத்தை உபதேசித்து போரில் வெற்றி பெறச்செய்வார்!
இண்ணொரு உருவகமும் உள்ளது!


ஒரு மனிதனின் ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அவனது ஆவி--உயிரே தேரோட்டீ!கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனின் உயிராக ஓடிக்கொண்டு உள்ளது இந்த ஆவி எடுத்துக்கொள்ள பட்டால் சரீரம் அழிந்து ஆத்துமா நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரைக்கு போய் விடும்!

எனவே ஒரு மனிதனுக்கு கடவுளை நெருங்கிய ஒரு பொருள் அவனது ஆவி-உயிரே! அந்த உயிரில் ஆத்துமாவை ஒடுக்கி தியானம் அப்பியாசித்து வந்தால் உயிருணர்வு பெருகி கடவுளின் அருள் ஆத்துமாவில் பலம் பெருகும்!அப்போது சரீரத்தின் பின் செல்லுகிற ஆத்துமா சரீரத்தை அடக்கி கடவுளின் பின் செல்லுகிற ஆத்துமாவாக மாற்றம் பெரும்!

கடவுளோடு உறாவாடுகிற-பிரார்த்திக்கிற மன நிலை எளிதில் சித்திக்கும்!இறைதூதர்கள் மூலம் வந்த வேதம் ஆழமாக புரிந்து ஜீவனோடு கடைபிடிக்க ஏதுவாகும்!இல்லாவிட்டால் இறைதூதர்கள் கொண்டுவந்த வேதத்தை கையிலே வைத்துக்கொண்டு சடங்காச்சாரமாக புரிந்து கொண்டு நுனிப்புல் மேய்ந்து கொண்டு நான் பெரிசு நீ பெரிசு என மதச்சண்டை போட ஊக்குவிக்கிற அசுர மாயையில் உலகம் மீண்டும் போய் விழுந்து விடும்!



யோகம்  2:  சாங்கிய யோகம் !!! 

அழியும் உடம்பினுள் உறையும் ஆத்துமா அழிவற்றது !!

கீதை 2:10 அப்போது கொந்தளிக்கிற சேனைகளின் மத்தியிலே சாந்தமுடன் புன்னகை பூத்த யுகபுருஷன் கிரிஸ்ணர் துக்கசாகரத்தில் மூழ்கிய அர்ச்சுணனுக்கு பின்வருமாறு உபதேசித்தார் !!

கீதை 2:11 இறைதூதர் கிரிஸ்ணர் கூறுகிறார் : பட்டறிவால் விளைந்த வார்த்தைகளையே பேசுகிறாய் அர்ச்சுணா ! நன்று ! ஆனாலும் துக்கப்பட தகுதியில்லாதைவகளுக்கு நீ அஞ்சலி செலுத்துகிறாய் !யார் ஞானம் விளைந்தவர்களோ அவர்கள் உயிரோடு இருக்கிறவர்களுக்கோ அல்லது மரித்தவர்களுக்கோ வெதும்புவதில்லை !!

கீதை 2:12 படைப்பின் துவக்கத்திலிருந்து நான் இல்லாத நேரம் இல்லை அல்லது நீயோ ஏன் இங்குள்ளோர் அனைவரும் இல்லாது போகும் நேரம் இனிமேலும் இல்லை !!

கீதை 2:13 உடலினுள் உறையும் ஆத்துமா இந்த உடம்பில் குழந்தை ; வாலிபம் மற்றும் வயோதிகத்துள் கடந்து போவதுபோல இறப்பிற்குப்பின்னும் ஆத்துமசரீரமாய் உடம்பையும் கடந்துபோகிறது ! உணர்ந்தோன் உடம்பு கடந்து போவதற்காய் தடுமாற்றம் அடைவதில்லை !!

கீதை 2:14 நிலைத்த தன்மை அற்ற ``இன்பம் மற்றும் துன்பம்`` ஆகியவற்றின் தற்காலிக இருப்பும் அல்லது சின்னாளில்  இல்லாதுபோவதும் குளிர்காலமும் கோடைகாலமும் மாறிமாறி வருவது போன்றதே ! பாரத குலத்தோன்றலே ! இவைகள் புலண்களின் நுகர்சியிலிருந்து தோன்றுபவையே ! அவைகளால் உண்டாகும் பாதிப்புகளை பொருட்படுத்தாத மனநிலையை கற்றுகொள்ளவேண்டும் !!

கீதை 2:15 மனிதர்களில் சிறந்தவனே ! யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கபடாத மனநிலை உடையவனாய் இரண்டிலும் சமநிலை எய்தியவனோ அவனே விடுதலை பெற தகுதியுடையவன் !!

கீதை 2:16 உண்மையை உணர்ந்தவர்கள் நிலையற்ற பெளதீக பொருட்களுக்கு நீடிப்பும் : நிலைத்த ஆத்துமாவுக்கு முடிவும் இல்லையென்றே தீர்க்கமாய் உரைக்கிறார்கள் ! உலகம் சார்ந்தவைகள் மற்றும் உள்ளார்ந்தவைகள் இரண்டின் இயல்புகளை ஆராய்ந்தே இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள் !!

கீதை 2:17 உடல் முழுவதும் நிறைந்திருக்கும் ``ஆத்துமா அழிவற்றது `` என அறியக்கடவாய் ! அழிவற்ற ஆத்துமாவை இப்போரினால் கொல்லமுடியாது !!

கீதை 2:18 கண்டறிந்து கைப்பற்ற இயலாத உள்ளார்ந்த மனித ஆத்துமா (ஜீவாத்துமா) அழிவற்றது ! அதன் பெளதீக உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும் ! ஆகவே போரிடுவாயாக !! 


 கீதை 2:19  தன்னைத்தானே அழித்துக்கொள்ளவோ அல்லது அடுத்த ஆத்துமவை அழிக்கவோ ஜீவாத்துமாவாலும் முடியாது ! ஆகவே யார் பிறரை கொல்லுவோம் அல்லது பிறரால் கொல்லப்படுவோம் என நினைக்கிறார்களோ அவர்கள் அறிவீணர்களே !!

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

கீதை 2:21 பார்த்தா ! ஆத்துமா அழிவற்றது ; நித்தியமானது :பிறப்புஇறப்பை கடந்தது ; கட்டிவைக்கபட முடியாதது என்பதை உணர்ந்த ஒருவன் ``கொல்லுவது கொல்லப்படுவது`` என்பதை கடந்துவிடுகிறான் !!

கீதை 2:22 ஒரு மனிதன் பழைய ஆடைகளை களைந்து புதிய ஆடைகளை அணிந்துகொள்ளுவது போல புதியபுதிய உடல்களாக பரிணமித்துகொள்ளுகிறது ; தளர்ந்து பயனற்று போன உடலை விட்டுவிடுகிறது !!

கீதை 2:23 ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டமுடியாது ! தீயினால் எரிக்கமுடியாது ; தண்ணீராலும் பதப்படுத்தமுடியாது அல்லது காற்றினாலும் பறக்கடிக்க முடியாது !!

கீதை 2:24 அனைத்துமாகிய பரமாத்துமாவோ பிரித்துபார்க்க முடியாதது ; சாம்பலாக்கவோ கரைக்கவோமுடியாதது ; உலர்ந்தும் போகாதது !பரமாத்துமா முடிவே இல்லாதது ; எங்கும் நிறைந்தது ; மாற்றமடையாதது ; அகன்றுபோகாதது !!


கீதை 2:25 ஆத்துமா கண்ணால் காணமுடியாதது ; ஒடுக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாதது ! இவற்றை அறிந்தபின்பு லெளகீக உடலுக்காய் ஏன் துக்கபடவேண்டும் ?

கீதை 2:26 போரில் வல்லவனே ! ஆத்துமா பிறக்கிறது அழிகிறது என நம்பிக்கொண்டிருந்ததாலேயே உனக்கு இந்த துக்கம் உண்டாகிறது !!

கீதை 2:27 இப்பிறவியின் உடல் நிச்சயம் அழிந்தே தீீரும் ! ஆத்துமாக்கள் இப்பிறவிக்கு பிறகு அடுத்த பிறவியில் ல் பிரவேசிக்கின்றன ! ஆகவே உன் மேல் வந்த கடமைகளை நிறைவேற்ற துக்கம் கொள்ளாதே !!

கீதை 2:28 எல்லா படைப்பிணங்களும் படைப்பவரால் வெளிப்படுத்தபடாதபோது இல்லாதவைகளைப்போல இருந்தவைகளே ! தற்காலிகமாக வெளிப்படுத்தபட்டு இருப்பவைகளைப்போல செயல்படுபவைகளே ! முடிவில் அழிவடைந்து இல்லாதவைகளைப்போல ஆபவைகளே ! ஆகவே எவைகளுக்காய் துக்கபட என்ன இருக்கிறது ?

கீதை 2:29 சிலர் மட்டுமே அற்புதமான ஆத்துமாவை அறிந்து கொள்ளுகிறார்கள் ! சிலர் அற்புதமான ஆத்துமாவை பற்றி பேசிக்கொண்டு மட்டுமே உள்ளனர் ! சிலரோ கேள்விப்பட்டு மட்டுமே உள்ளனர் ! ஆனால் பலரோ எதுவுமே அறியாதவராகவே உள்ளனர் !!

கீதை 2:30 அழியும் உடலில் உறையும் ஆத்துமா அழிவற்றது ! ஆகவே அர்ச்சுணா ! எவருக்காகவும் நீ துக்கபட வேண்டிய அவசியமில்லை !!


தர்மத்திற்கான யுத்த களம்  மறுமையில் மேன்மைக்கான கதவு !! 

கீதை 2:31 சத்திரியனுக்கு நியமிக்க பட்ட தனித்த கடமை என்ற அளவில் தர்மத்திற்காக போரிடுவதை விட மேலான வேறு பொறுப்புகள் ஏதுமில்லை ! ஆகவே நீ தயங்குவதற்கு முகாந்தரமில்லை !!


கீதை 2:32 அப்படிப்பட்ட யுத்த களம் வாய்க்குமென்றால் அதற்காக ஆத்மதிருப்தி கொள்ளும் சத்திரியர்கள் இருப்பார்கள் பார்த்தா ! ஏனெனில் மறுமையில் மேன்மைக்கான கதவு திறக்கப்பட்டதை அறிந்து உவகை அடைவார்கள் !!

கீதை 2:33 தர்மத்திற்காக போரிடுவதை தட்டிகளித்தால் கடமை தவறிய குற்றத்திற்கு ஆளாவதோடு போர்வீரன் என்ற கீர்த்தியையும் இழப்பாய் !! 


கீதை 2:34 உலகோர் உன் இயலாமையை இகழ்வர் ! அத்தகைய அவப்பெயரை விட மதிப்புள்ளவருக்கு மரணமே மேலானது !! 

கீதை 2:35 உனது பேரையும் புகழையும் கொண்டாடும் யுத்த வீரர்களின் தலைவர்கள் நீ பயந்து யுத்த களத்தை விட்டு ஓடியதாகவே நினைப்பர் ! அதனால் உன்னை கோழை என்பதாக முடிவு செய்வர் !! 

கீதை 2:36 உனது எதிரிகள் வாய்க்கு வந்த படி வர்ணித்து சொல்லத்தகாத வார்த்தைகளால் இகழ்வர்! அதனை காட்டிலும் வேறு என்ன மனநோவு வரும் ? 

கீதை 2:37 குந்தியின் மகனே ! ஒன்று தர்மத்திற்காக யுத்த களத்தில் கொல்லப்பட்டால் மறுமையில் மேன்மையை அடைவாய் ! அல்லது போரில் வென்று உலக அரச போகத்தையும் அனுபவிப்பாய் ! ஆகவே மனதிடத்தோடு எழுந்து நின்று போரிடுவாயாக !! 

கீதை 2:38 இன்பதுன்பம் ; லாப நட்டம ; வெற்றி தோல்வி என்ற இருமைகளை கடந்து செயலுக்காக செயல் புரியும் மன நிலையில் போருக்காக போர் செய்க ! அப்படி செயல்பட்டால் பாவம் உன்னை பற்றாது !!

 மனச்சம நிலையில் செயலாற்றுவதே யோகம் !!

கீதை 2:39 இதுவரை பவ்தீக பொருட்களின் அடிப்படையில் இந்த மெய் அறிவை உனக்கு உபதேசித்தேன் ! இப்போதோ பலன் விளைவில் பற்று கடந்த வேள்வியைப்பற்றி உனக்கு உபதேசிக்கிறேன் ! பிரதாவின் மகனே ! அந்த அறிவில் நிலைத்து நின்று செயல்பட்டால் கர்மங்களால் உண்டாகும் தளைகளை தகர்த்து சுதந்திரமடைவாய் !!

கீதை 2:40 இந்த வேள்வியில் இழப்போ அல்லது குறைச்சலோ ஏற்படாது !மாறாக இவ்வழியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஒருவன் அதி பயங்கரமான பயத்தையும் கடந்து விடுவான் !!

கீதை 2:41 இவ்வழியில் நடப்போர் தங்கள் இலக்கில் தெளிவடைந்து ஒரே நோக்கத்திற்காய் செயல்படுவர் ! குருவம்சத்தில் சிறந்தவனே ! இலக்கில் தெளிவில்லாதவர்களின் அறிவுத்திறனோ பல பல வாய்க்கால்களில் வடிந்து போகும் !!

கீதை 2:42 ஆழ்ந்த அறிவற்றவர்கள் லோகாதாய பக்தி மார்க்கங்களின் ஜால வார்த்தைகளை வேதமென நம்பி அதன் பால் கவரப்படுகிரார்கள் ! அது வசதியையும் வாய்ப்பையும் அதிகாரத்தையும் ஆட்சியையும் அடைவதற்கு வாக்களித்து அதன் மூலம் உயர்ந்த லோகத்தையும் அடைந்துவிடலாம் என நம்ப வைக்கிறது ! 

கீதை 2:43 ஆடம்பரமான வாழ்வையும் புலனின்பங்களை அனுபவிப்பதையுமே விரும்பி இதை விட மேலான சம்பத்து வேறு என்ன வேண்டும் என கூறிக்கொள்கின்றனர் !!

கீதை 2:44 புலனின்பங்களையும் டாம்பீக வாழ்வையும் அதனால் சுயபெருமையும் அடைந்தவர்கள் அந்த வழியில் மனம் லயித்ததனால் உன்னதமான் கடவுளுக்கு உள்ளார்ந்த பக்தி -இறைஅன்பு புலப்படாமலேயே போகின்றனர் !!

கீதை 2:45 தாமச, ரஜோ மற்றும் சத்வம் எனும் மூவகை குணங்களிலிருந்து பிறக்கும் அண்ணமயம், மனோமயம் ,மற்றும் விஞ்ஞானமயம் என்ற மூவகை கோஷங்களின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அந்த லோகாயாத வேதங்கள் வழிகாட்டுகின்றன !

அர்ச்சுனா ! இந்த மூன்றையும் கடந்து மெய்ஞானமய கோஷத்தில் நுழைந்தால் எல்லாவகையான் இருமைகளின் தாக்கத்தை கடந்து ; வெற்றி தோல்வி வேட்கையை களைந்து பரிபூரணத்தில் தன்னில்தானே மகிழ்ந்திருப்பாய் !! 

கீதை 2:46 பெரிய ஏரியால் கிடைக்கும் அனுகூலங்கள் எல்லாம் ஒரு கிணற்றிலிருந்தும் அடையப்பெறும் ! அதுபோல லோகாயாத வேதங்கள் அனைத்தினதும் அனுகூலங்கள் எல்லாம் அதனை கடந்த மெய்ஞானத்தை அடைந்தவனுக்கும் உண்டாகும் !!

கீதை 2 :47 உனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்வதற்கு மட்டுமே உரிமை உண்டு ; ஆனால் செயல்களின் பலன்களின் மேல் உனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை ! எப்போதும் உனது செயல்களின் விளைவுகளுக்கு நீ காரணன் என்று எண்ணாதே ; அதற்காக கடமைகளை தட்டிகழிக்கவும் உன்னை ஆட்பாடுத்தாதே !!

கீதை 2 :48 வெற்றி தோல்வியின் மீது உள்ள பற்றுதல்கள் ஒழித்து விட்டு மன சமநிலையோடு உனது கடமைகளை செய்து வருவாயாக ! அர்ச்சுனா ! அந்த சம நிலையே யோகம் என்பதை அறிக !!

கீதை 2 :49 தனஞ்சய ! லோகாயாத செயல்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து :கடவுளையே சரனாகதியடைத்து  அவருக்கு பக்தி தொண்டாக கருதி உன்மேல் வந்த கடமைகளை செய்து வருவாயாக !
அவ்வாறில்லாமல் பலன்களை அனுபவிக்கும் நோக்கில் செயல்படுவோர் துன்பத்தையே அடைவர் !!

கீதை 2 :50 யார் ஞானம் முதிர்ந்த பக்தி தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்களோ அவர்கள் இவ்வுலக வாழ்விலேயே நன்மையான செயல்கள் அல்லது தீமையான செயல்கள் என்ற பேதத்தை கடந்து சுதந்தரமடைவர் ! ஆகவே அத்தகைய யோகத்தில் நிலைக்க பெருமுயற்சி செய்க ! அதுவே செயல்களில் சிறந்த செயலாகும் !!

கீதை 2:51 இவ்வாறான மெய்ஞான பக்தியின் மூலம் உன்னதமான கடவுளுக்கே தொண்டாற்றி மகரிஷிகளும் நல்லடியார்களும் உலகியல் வாழ்வில் கர்மங்களின் தளைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்கிறார்கள் ! இப்பாதையில் நடப்பதால் எல்லாவகையான பிரவிப்பினியை வெல்லும் தகுதியடைந்து நித்திய ஜீவனுக்கு ஏதுவாகிறார்கள் !!

கீதை 2:52 மாயைகள் என்னும் அடர்ந்த வனத்தை உன் அறிவுத்திறன் கடந்து விட்டால் ; உலகம் அறிந்ததைதையும் இனிமேல் அறியப்போவதையும் விஞ்சிய நிலையடைவாய் !!

கீதை 2:53 எப்போது உன் மனம் லோகாயாத  வேதங்களின் ஜால வார்த்தைகளால் மயங்காத நிலையடைகிறதோ ; தன்னை உணர்ந்து பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதில் நிலைத்து நின்றுகொண்டே இருக்கிறதோ அப்பொழுதே நீ தெய்வீக உணர்வில் -மெய்ஞானமய கோஷத்தில்  திளைக்க முடியும் !!

கீதை  2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?

ஆத்தும  விடுதலை !!

கீதை  2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும்  புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற  பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!

கீதை  2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும்  பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!

கீதை  2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில்  பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!

கீதை  2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல  புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!

கீதை  2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் துலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபரிபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்துமபரிபூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர ஆத்துமா ; கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !! 

கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை !  தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!

கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!

கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை உண்டாகிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை வளர்க்கிறது !!

கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!

கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!

கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது !  ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !! 

தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதை !! 

கீதை 2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன் ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை ! இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த சந்தோசமும் நிலைப்பதில்லை !!

கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!

கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!

கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!

கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து  மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!

கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!

கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!

யோகம் 3`கடமையைச்செய் பலன் விளைவில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம்!!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனனோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக;இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய்!

பொதுவாக ஒரு வேலையை நாம் பிறருக்காக செய்ய வேண்டிய சூழ் நிலை வரும்போது அதனால் நமக்கு என்ன ஆதாயம் என்று சிந்தித்து அதில் ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என சொதப்புவது உலக வழக்காக இருக்கிறது

அரசுத்துறைகளில் ஆதாயம் வந்தால் அதற்கு ஒரு வேலை இல்லாவிட்டால் அதை ஒலட்டோஒலட்டு என்று ஒலட்டுவது ஒரு கலையாக கற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படுகிறது!

அது தற்காலிக வெற்றியே தவிற நீடித்த நோக்கில் நமக்கு நாமே நம் சந்ததிகளுக்கு வரவேண்டிய நன்மைகளின் அளவை குறைத்துகொள்ளுகிறோம்! பல வேலைகளில் நாம் உழைத்தும் பலனில்லாமல் போவது நம் முன்னோர்கள் இப்படி சொதப்பியதன் விளைவு   என்பது உண்மை!

ஒரு வேலையில் நமது சூழ் நிலையின் காரனமாக ஈடுபடாமலேயே இருந்து விடலாம் அல்லது அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்! ஆனால் செய்யத்தொடங்கி அதனை சொதப்ப கூடாது!

செயலுக்காக செயலை ஈடுபாடுடன் செய்ய வேண்டும்! முடிந்த அளவு நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வது `கர்ம யோகம்` ஆகும்!

செயல் செயலுக்காக செய்யப்படுவது கர்ம யோகம்!

அதில் ஒரு ஆத்மதிருப்தி என்பது உள்ளே விழைவது! நம்மால் செய்யப்பட்ட செயலுக்கு உடனடி பலனை எதிர்பார்க்க வேண்டியதில்லை!

நம்மால் பலனடைந்தவர்கள் நமக்கு பதில் செய்வார்கள் என்றோ  ;குறைந்தது உணர்ந்தவர்களாக இறுப்பர்கள் என்றும்  எதிர்பார்க்க வேண்டியதில்லை!


கீதை 3:19 எனவே விளைவுகளின் பலன்களில் பற்றுவைக்காமல் ஒருவர் கடமையை கைக்கொள்ளவேண்டும்! யார் பற்றற்று கடமை செய்கிறார்களோ அவர்கள் கடவுளை அடைவர்!


கடவுளுக்காக எதையும் செய்வதாக நினைக்கிற கர்மயோக மனநிலையை அடைந்தவர்க்கு கடவுள் எல்லாவற்றிர்க்கும் ஏற்ற காலத்தில் பலனளிப்பவர்; அவர் கடனாளியல்ல என்பது நன்கு தெறியும்!

குரான் 11:51. "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? --முகமது நபி!

6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.

நிறை பக்தன்; தான் செய்கிற செயலை ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுகிறான்! இன்றைய வாழ்வு,சூழ்நிலை,முன்னேற்றம் இவற்றிர்க்கு கடவுளை நம்பியிருக்கிரான்

தனது அறிவையும் திறமையையும் ஆழமாக அவன் நம்புவதில்லை!

தனக்கு வருகிற வளர்ச்சிக்கு அவன் நன்றி செலுத்துகிறவனே தவிற குதுகலம் அவனை நிறப்புவதில்லை! தன் தோல்விகளுக்கோ ,தடங்கள்கலுக்கோ அவன் மனம் கலங்குவதுமில்லை! ஒரு குழந்தையைப்போல் அவன் மனம் கடவுளிடத்து நிலைத்திறுக்கிறது!


கீதை 2:150 மனிதர்களில் சிறந்தவனே!யாரொருவன் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்படையாதவனோ;இரண்டிலும் சமநிலை அடைந்தவனோ அவனே விடுதலை பெற தகுதி உள்ளவன்!

அணுபவத்தில்; ஒரு விசயத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் நமக்கு  இருக்கும் வரை அதில் நாம்தான் ஒளப்பிக்கொண்டு இருப்பதாக இருக்கும்!ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத மனச்சம நிலையை அடைந்து விட்ட விசயத்தில் விரைவில் வெற்றி வந்து சேரும்!ஏனெனில் அதில் கடவுள் செயல்பட தொடங்கி விடுகிறார்!

எங்கே நம் சுயம் அடங்குகிறதோ கர்மயோகம் ஆகுதியாக --வேள்வியாக --பிரார்த்தனையோடு செய்யப்படுகிறதோ அதில் கடவுளே விளைவுக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்!

கீதை 18:6 எல்லா செயல்களும் பற்றற்று செய்வாயாக!விளைவுகளில் எந்த எதிர்பார்ப்பும் கூடாது!செயலுக்காக செயலை செய்!இதுவே என் முடிவான கருத்து!


யோகம் :3    கர்ம யோகம்!!!

கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாகவே வேலை செய்யப்படவேண்டும் !!!

கீதை 3;1 அர்ச்சுனன் கேட்கிறான் : ஜனார்த்தனா !கேசவா ! உலகியல் ஆதாய செயல்களை விட ஞானம் கருதிய செயல்களே சிறந்தது என உபதேசிக்கும் தாங்கள் பின்னை எதற்காக கொடூரமான இந்த யுத்தத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் ?

கீதை 3;2 எதிரெதிராக தோன்றும் உமது உபதேசத்தால் என் புத்தி குழம்புகிறது ! ஆகவே தீர்க்கமாக இவை இரண்டில் எது எனக்கு மேண்மையானது என தெரிவிப்பீராக!!

கீதை 3;3 உன்னதமான கடவுளின் தூதர் கூறுகிறார் : தன்னை உணர்கிற அறிவில் வளர்கிற மனிதர்களில் பொதுவாக இரண்டு வகைப்பட்டவர்கள் உள்ளனர் ! சிலர் புற உலக செயல்பாடுகளின் தர்க்கவியல் நுட்பங்களை கண்டுணர்ந்தும் ;சிலர் பக்தி சேவையின் மூலமாகவும் அறிவில் வளர்கிறார்கள் !!

கீதை 3;4 செயல்களை விட்டு விலகியோடி தவம் செய்வதால் மட்டும் ஒருவன் பாவவினை; எதிர்வினைகளிலிருந்து தப்பிக்க முடியாது ! அல்லது செயல்களை அர்ப்பணிப்பதால் மட்டும் பக்குவ நிலையை எய்தவும் முடியாது !!

கீதை 3;5 மனிதர்கள் இயற்கையாகவும் சுற்றுபுற சூழ்னிலைகாளாலும் உருவாக்க பட்ட இயல்புகளால் பந்தப்பட்டு தப்பிக்க முடியாதளவு கிரியை--ஏதாவது செய்துகொண்டே உள்ளனர் ! எனவே யாராலும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவே முடியாது !!

கீதை 3;6 செயல்படும் புலன்களை  உலகிற்காக கட்டுபடுத்தினாலும் மனதை புலன் நுகர்ச்சி பொருட்களின் மீது அலைபாய்வதிலிருந்து தடுக்க இயலாதவர்களாய் இருப்பவர்களும் தன்னைதானே ஏமாற்றி கொள்ளும் பொய்யர்களே !!

கீதை 3;7 இதற்கு மாறாக கர்மயோகம் செய்கிறவர்கள் --அல்லது கிரிஷ்ண தெளிவில் நிலைத்தவர்கள் பலன் விளைவுகளில் பற்றை களைந்தவர்களாய் கடமை உணர்வோடு செயலாற்றி மனதாலும் செய்கையாலும் புலனிச்சைகளின் பந்தத்தை கடற முற்சி செய்கிறார்கள் !! அவர்களே சிறந்தவர்கள் !!

கீதை 3;8 ஆகவே உன் மேல் விழுந்த கடமையை மனப்பூர்வமாக செய்வாயாக ! அதுவே செயல்மறுப்பை  விட சிறந்தது ;ஏனெனில் ஸ்தூல உடலை செயலில்லாமல் ஒருவனால் நிர்வகிக்கவே முடியாது !!

கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனநோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக! இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய் !!


பொருட்களின் வழி யாகங்களா ? யோகங்களின் வழி யாகங்களா ? 

கீதை 3:10 படைப்பின் துவக்கத்தில் கடவுள் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்து மனிதர்களுக்கு உண்ணத்தக்க கால்நடைகளையும் படைத்து ஆசிர்வதித்தார் ! அவற்றை கடவுளுக்கான யாகங்களாக -- பாவ நிவாரண ;குற்ற நிவாரண பலிகளாக  செலுத்தி கடவுளோடு ஒப்புறவாகும் மார்க்கத்தையும் உயிர்ப்பலி இட்டு அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கவும் அருள் செய்தார் !!

கீதை 3:11 தேவதூதர்களில் அசுரர்கள் ஆனவர்கள் மனிதர்கள் தங்களுக்காக பலிசெலுத்தி வழிபடுவதில் மகிழ்ந்து மனிதர்களின் பலவகை இச்சைகளை நிறைவேற்றுவதும் ;அதனால் அசுரர்களுக்கும் மனிதர்களுக்கும்  இணக்கம் உண்டாகி அசுரர் ஆளுமை செய்வதுமாய் ஆயிற்று !!

கீதை 3:12 உலகியல் வாழ்வின் மோஹங்களுக்காக ;  அசுரர்களை யாகங்காளால் திருப்தி படுத்துவதும் அசுரர்கள் மனிதர்களின் ஆடம்பர அலங்கார, ஆட்சிகளை நிறைவேற்றுவதுமாய் ஆனது ! அது கடவுளுக்கு சேரவேண்டிய மஹிமையை அசுரர்கள் திருடுவதாயிற்று !!

கீதை 3:13 அப்படியில்லாமல் முழுமுதல் கடவுளுக்கே முதல்மரியாதையாக யாகங்கள் --உயிர்ப்பலி செலுத்தி அதனை உண்ட அவரது நல்லடியார்கள் எல்லா பாவங்களிலிருந்தும் வீடுபேறு அடைந்தார்கள் ! மற்றவர்களோ தங்கள் சுய இச்சைகள் நிறைவேற யாகங்கள் செய்து பாவத்தையே உண்டார்கள் !!

கீதை 3:14 அதனாலேயே விதிக்கபட்ட கடமைகளில் யோகங்களாக யாகங்கள் நிலைமாற்றம் செய்யப்பட்டன !இத்தகைய யோகங்கள் வழியான யாகங்களே மழை பெய்ய காரணமாகிறது ;அந்த மழையினால் உணவுதாணியங்கள் உண்டாகி அனைத்து உயிரிணங்களுக்கும் ஆதாரமாகிறது !!

கீதை 3:15 ஒழுங்குபடுத்த பட்ட கடமைகள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன !அந்த வேதமோ முழுமுதல் கடவுளால் வெளிப்படுத்தபட்டவை !அத்தோடு உண்ணதமான தெய்வீக இயல்புகள் யோக நெறிமுறைகளில் பொதிந்துள்ளன!!

கீதை 3:16 எனதருமை அர்ச்சுணா ! வேதங்கள் காட்டுகிற யோக நெறிமுறைகளை வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கடைபிடிக்காதவர்கள் பாவம் நிறைந்த பாதையிலேயே நடந்து வெறும் புலனிச்சைகளுக்காகவே வாழ்ந்து துக்கசாகரத்தில் மூழ்குகிறார்கள் !!

கீதை 3:17 யார் வாழ்வு நெடுகிலும் தன்னை தானே உணர்கிறவனாய் ; தன்னில்தானே நிலைத்து திருப்தியுற்று ; தெய்வீக சமாதானம் எய்தியவன் பரிபூரணத்தை  எட்டுகிறான் !அவன் செயல் செயலின்மையை கடந்தவனாகிறான்!!

கீதை 3:18 பரிபூரணமடைந்த மனிதனுக்கு ; விதிக்கபட்ட கடமைகளை நிறைவேற்ற பாடுபடுதல் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை ! அல்லது அக்கடமைகளை நிறைவேற்றாமலிருக்க காரணங்களும் இல்லை ! அல்லது எதற்காகவேனும் பிறரை  எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமுமில்லை !!

 கீதை 3:19 ஆகவே பலன் விளைவுகளில் பந்தப்படாமல் செயலுக்காக செயலை ஒருவன் செய்துவரவேண்டும் !அப்படி பற்றில்லாமல் செயல்படுவதால் ஒருவன் கடவுளை அடைகிறான் !!
 கீதை 3:20  விதிக்கபட்ட செயல்களை செய்வதன் மூலமாக ஜனகர் போன்ற அரசர்கள் பூரணத்தை எய்தினார்கள் ! நீயும் அதுபோல பொதுமக்களுக்கு கற்றுகொடுக்கும் பொறுப்போடு கடமையை செய்வாயாக !!

கீதை 3:21 தலைவர்கள் எவ்வழியோ பொதுமக்களும் அவ்வழியே செல்கிறார்கள் ! முன்னுதாரமான செயல்பாடுகளில் தலைவன் என்ன தரத்தை வெளிப்படுத்துகிறானோ  அதனையே அனைவரும் பின்பற்றுவார்கள் !!

கீதை 3:22 பிரதாவின் மகனே !மூவுலகங்களிலும் எனக்கு விதிக்க பட்ட கடமைகளும்  ஏதுமில்லை ! நான் விரும்புகிறவைகளும் ஏதுமில்லை ! எதையாவது பெற்றுகொள்ள வேண்டிய அவசியமுமில்லை ! இருப்பினும் செயல்களில் ஈடுபட்டவனாகவே இருக்கிறேன் !!

கீதை 3:23 பார்த்தா ! என் மேல்வந்த கடமைகளை அக்கறையுடன் செய்துகொண்டிருப்பதை ஒருவேலை நான் நிறுத்தினால் முழு உலகமும் என்னை பின்பற்றி பொறுப்புகளை தட்டிகழிக்காதா ??

கீதை 3:24 நான் செயல்படுவதை நிறுத்தினால் முழு உலகமும் சீரழிவில் விழுந்து வேண்டாத குழப்பங்கள் உருவாக காரணமாகிவிடுவேன் ! அதனால் உயிரிணங்கள் அனைத்தினதும் நிம்மதியை கெடுத்தவனாவேன் !!

கீதை 3:25 ஞானமில்லாதோர் பலன் விளைவுகளில் பற்று கொண்டோராய் செயல்பட்டால் ; வெளிப்பார்வைக்கு அறிவுள்ளோரும் அதேமாதிரியாகவே செயல்பட வேண்டும் ---உள்ளார்ந்து பலன் விளைவுகளில் பந்தமில்லாதவராக ! ஏனெனில் பொதுமக்களை உய்விக்கும் கடமை ஞானமுள்ளோர் மீதே உள்ளது !!

கீதை 3:26 கிரிஸ்ண தெளிவை கற்றுணர்ந்த ஞானமுள்ளோர் ; பலன் கருதி பணியாற்றும் ஜனங்கள் மேலும் கெட்டுபோகாதபடி கடமையை தட்டிகழிக்க பழக்கலாகாது ! மாறாக கடவுளுக்கு அர்ப்பணமாக ; செயலுக்காக செயல் புரிந்து ஜனங்களை எல்லா வகையான செயல்களையும் செய்கிறவர்களாய் பழக்கவேண்டும் !!

கீதை 3:27 மூவகை(சத்துவ, ரஜோ &தாமச) குணங்களால் மயக்கமுற்றிருக்கும் ஆத்துமாக்கள் ; உலகிலே  நால்வகை தொழிலிருந்து இயற்கையாக எழும்பும் செயல்பாடுகளை தாமே திட்டமிட்டு ; நிர்வகித்து செயல்படுவதாக நம்பிக்கொண்டுள்ளனர்  !

கீதை 3:28 போர்க்கலையில் வல்லவனே !மெய்யறிவில் நிலைத்த ஆத்துமாக்களோ கடவுளுக்கு அர்ப்பணமாக செயல்படுவதற்கும் பலன் விளைவில் பற்று கொண்டு செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் !  புலன்களுக்கும் புலன்இச்சைகளுக்கும் ஆட்பட்டு அதற்காக செயல்படுவதிலிருந்து தம்மை விடுவித்து கொள்கிறார்கள் !!

கீதை 3:29 நால்வகை தொழிலின் இயல்புகளால் குழம்பிய ஆத்துமாக்கள் ;அறியாமையால் உலகியல் செயல்பாடுகளை சாசுவதம் என நம்பி அதற்கு பந்தப்பட்டு கொள்கிறார்கள் ! ஞானமின்மையால் கீழ்னிலையடைந்த அவர்களின் செயல்பாடுகளை ஞானமுள்ளோர் ஒருபோதும் தடைசெய்யலாகாது !!

கீதை 3:30 ஆகவே அர்ச்சுணா ! கடவுளின் மீது மனம் நிலைத்தவனாய் ; அவரை முற்றிலும் சரணடைந்து தான்தனது என்ற அகம்பாவத்தை விட்டுவாயாக ! மனதாழ்மையுடனும் கவணத்துடனும் போரிடுவாயாக !!

கீதை 3:31 யார் எனது அறிவுறுத்தல்களை மனமுரண்பாடின்றி பக்திபூர்வமாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்களோ அவர்களே  பலன்விளைவில் பற்று கொண்ட செயல்பாடுகளின் பந்தத்திலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவர் !!

கீதை 3:32 யார் மனமுரண்பாட்டால் இந்த அறிவுறுத்தல்களை அவமதித்து  ; பின்பற்ற மறுக்கிறார்களோ அவர்கள் எல்லா அறிவையும் இழந்து மதியீணராய் இருளுக்குள் அமிழ்ந்து அழிவை அடைவது திண்ணம் !!


உலகில் அழிவை உண்டாக்கும் எதிரி--இச்சை !! 

கீதை 3:33 எல்லா மனிதர்களும் தங்களிடமுள்ள மூவகை குணங்களிலிருந்து எழும்பும் செயல்களை இயற்கையாகவே  தன்னையறியாமல் செய்கிறார்கள் ! அதுபோலவே தன்னை உணர்ந்த ஞானியரும் தங்கள் இயற்கையின்படியே செயல்பட்டால் யாரை போய் கண்டிப்பது??

கீதை 3:34  தன்னை சுற்றிய பொருட்களின் மீது ஈர்ப்போ வெறுப்போ கொள்ளுவது புலன்களின் இயல்பாகும் ! அதனை கட்டுப்படுத்தி முறையான வழிகளில் பழக்கவேண்டும் ! மாறாக புலன்களின் ஈர்ப்புக்கும் வெறுப்புக்கும் அடிமையாகக்கூடாது ! ஏனெனில் தன்னை உணர்வதற்கான பாதையில் அவை பெரும் தடைகற்களாகும் !!

கீதை 3:35 ஒருவன் அடுத்தவர் கடமைகளை மிகசரியாக செய்வதைகாட்டிலும் தனக்கு விதிக்கபட்ட கடமைகளை தவறுதலாக கூட செய்வது நல்லது !அடுத்தவர் கடமைகளில் சிக்கிகொள்வதை காட்டிலும் தனது கடமைகளை செய்து அழிவதாயினும் அதுவே தலைசிறந்தது !!

கீதை 3:36 அர்ச்சுணன் கூறினான் : விரிஸ்னி குலத்தோனே ! முழுமனதில்லாமலேயே பலவந்தப்படுத்தப்பட்டது போல ஒருவன் சிலசமயங்களில் பாவகாரியங்களை செய்ய ஏன் தூண்டப்படுகிறான் ??

கீதை 3:37 இறைதூதர் கிரிஸ்ணர் கூறிணார் : இச்சைகள் தான் காரணம் அர்ச்சுணா !  புற உலகாலுண்டாகும் மோகம் ரஜோ குணத்தால்  மூர்க்கமாய் மாற்றமடைகிறது ! அந்த மூர்க்கமே எல்லா பாவத்திற்கும் காரணமாகி உலகில் அழிவை உண்டாக்கும் எதிரியாய் விளங்குகிறது !!

கீதை 3:38 நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போல ;கண்ணாடியில் தூசி படிந்திருப்பது போல ;அல்லது கரு கருவறையால் சூழப்பட்டிருக்கிறது போல இப்பூவுலகின் எல்லா உயிரிணங்களும் இச்சைகளின் பலவகைப்பட்ட படிமானங்களால் சூழப்பட்டுள்ளன !!

கீதை 3:39 எல்லா மனிதர்களின் அறிவும் ஆண்மாவின் எதிரியான இச்சைகளால் நெருக்கி அமிழ்த்தப்படுகிறது ! அது ஒரு போதும் திரிப்தியடையாதது ;பற்றியெரிகிற நெருப்பாக தூய உணர்வுகளை சுட்டு பொசுக்குவது !!

கீதை 3:40 புலன்கள் , மனம் மற்றும் மதினுட்பம் ஆகியவைகளே இச்சை அமர்ந்து ஆட்சிபுரியும் இடங்களாகும் ! அவைகளை தூண்டி எல்லா மனிதர்களின் அறிவிலும் குழப்பத்தை உண்டாக்குகின்றன !!

கீதை 3:41 அர்ச்சுணா ! பாவத்தின் பெரிய அடையாளமான இச்சையை முளையிலேயே கிள்ளி எறிவாயாக ! பரதவர்களில் சிறந்தவனே ! தன்னை உணர்தலையும் ஞானத்தையும் அழிக்கிற இச்சையை முயற்சித்து வீழ்த்துவாயாக !!

கீதை 3:42 கர்ம இந்திரியங்கள்--புலன்கள் ஜடப்பொருள்களை விட உயர்ந்தவை ! மனம் புலன்களை விட உயர்வானது !அறிவோ மனதையும் விட உயர்வானது !ஆனால் ஆத்துமாவாகிய மனிதனோ அறிவையும் விட மிகமிக உயர்ந்தவன் !!

கீதை 3:43 உலகம் ,புலன்கள் ,மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் விட தனது உண்ணதத்தை ஒருவன் உணரவேண்டும் ! யுத்தத்தில் வல்ல அர்ச்சுணா ! ஆண்ம உனர்வை விரிவடைய செய்து மனதை கீழ் நிலையினின்று உயர்த்தவேண்டும் ! இவ்வாறாக ஆண்ம பலமடைந்து வெல்லவே முடியாத எதிரியாகிய இச்சையை வெல்லவேண்டும் !!