Tuesday, July 17, 2012

கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம்










கீதை 17 :1 அர்ச்சுணன் கேட்டார் : கிரிஸ்ணரே ! சாஸ்திர விதிகளின் படியாக உய்வடைய முயலாமல் தன்னியல்பான ஊக்கத்தின் படியாகவே பலர் ஆன்மீகவாழ்வில் உய்வடைய முயற்சிக்கிறார்களே அவர்கள் எக்குணத்தில் இருக்கிறார்கள் ? சத்வத்திலா ; ரஜஸ் அல்லது தமோகுணத்திலா ?
இங்கு ஒரு முக்கியமான விசயம் வெளியாக்கப்படுகிறது . அது குருபாரம்பரியத்தின் வழிகாட்டுதல்களின் படியான ஆன்மீக வாழ்வு ; அல்லது நிறுவனங்கள் மதங்கள் வழி வாழ்வு அதாவது ஏதாவது ஒரு சாஸ்த்திர சம்பிரதாயங்களின் படியாக ஆன்மீகவாழ்வை ஒழுங்குகாக கடைபிடித்து முன்னேற முயற்சிக்க வேண்டும் என்பது பொதுவான நெறி . .
அப்படி ஏதுமில்லாமல் பெருந்திரளான மக்கள் தங்களின் இயல்பூக்கத்தின் படியாகவே ஆன்மீக வாழ்வில் தொடர்பு கொண்டுதான் உள்ளனர் . ஆன்மீக வாழ்வில் தொடர்பில்லாத மனிதன் இருக்கவே முடியாது
ஒருவனது அன்றாட செயல்பாடுகள் ; இயல்புகளை நிதானித்தால் அவனை ஏதாவது ஒரு மார்க்கத்தில் தொடர்பு படுத்தி விடலாம் .
நாத்தீகர்கள் அல்லது நவீன நாத்திகவாதிகள் ; ஆதிகால கம்யுனிஸ்ட்டுகள் கூட சமூக சீர்திருத்தம் ; மனிதநேயம் என்ற உள்ளார்ந்த ஒரு பக்தியை ; நன்மையை வேள்வியாக செய்துகொண்டிருப்பவர்களே .
சுயநலம் என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி பொதுநன்மைகளைவிரும்பி உள்ளார்ந்த முயற்சியும் ; தொண்டும் ; தியாகமும் எவரால் செய்யப்படுகிறதோ அது அந்த ஆத்மாவின் வேள்வியாவே கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்த பிறவியில் அந்த ஆத்மா பக்குவமுள்ளதாக ; நல்ல சூழ்நிலையில் பிறப்பெடுக்க வைக்கப்படுகிறது . நிஷ்ட்டை என்ற வார்த்தை தவம் ; தொண்டு ; வேள்வி ; நற்கருமங்கள் அனைத்தையும் குறிப்பவையே . ஏனென்றால் இவை அனைத்தும் ஆத்மாவிற்கு பலனளிப்பவை .
பெரியார் கூட தான் நம்பிய கொள்கைக்கு உண்மையானவனாக இருப்பவனே சுயமரியாதையாளன் என்றார் . சென்னை ஐஸ் ஹவுசில் விவேகானந்தர் தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டத்தில் அவர் பங்கு கொண்டு ; ராமகிரிஷ்ணரின் சீடர்களை உற்சாகப்படுத்தி பேசியுள்ளார் . அதில் அவர் தான் கொண்ட கொள்கைக்கு உள்ளார்ந்த அர்த்தத்தில் உண்மையானவனாக இருப்பது சரி என்றார் .
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு ; கடவுளின் பேரால் கடவுளுக்கு பயமில்லாமல் கடவுளின் பேரை சொல்லிக்கொண்டு பல சமூக அநீதிகளை சடங்குகளின் ; சம்பிரதாயங்களின் பேரால் சிலர் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் போது ; கடவுளின் அடியவர்கள் பலரும் காலாவதியான பல சம்பிரதாயங்களை சீர்திருத்தியிருக்கிரார்கள் . அப்படிப்பட்ட சீர்திருத்தத்தை கடவுளின் பேரை சொல்லாமலும் சிலர் செய்திருக்கிறார்கள் .வாயில் அவர்கள் நாத்தீகம் பேசினாலும் செயலால் சமுகத்தில் நன்மைகள் சீர்திருத்தங்கள் நடந்திருந்தால் அச்செயல்பாடு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதே .
நன்மைகள் ; வளர்ச்சிகள் ; மறுமலர்ச்சிகள் அனைத்தும் கடவுளாலும் அவரைச்சார்ந்த தேவ சக்திகளாலும் வருபவையே . தீமைகள் அனைத்தும் அசுர ஆவிகளால் வருபவையே .
கடவுளை நம்புவரிடத்தும் அசுர ஆவிகள் செயல்படமுடியும் ; கடவுளை நம்பாதவரிடத்தும் தேவ ஆவிகள் செயல்படமுடியும் .
சற்குருநாதர் இயேசுவின் வாழ்வில் அவர் யூத மத நிறுவனத்தையும் அதன் குருமார்கள் தங்களை கடவுளின் ஏஜண்டுகள் என கருதிக்கொண்டு செய்பவைகளையும் மிக கடுமையாக சாடியதை ; எதிர்த்ததை காணலாம்
இயேசு கடவுளை நம்பினார் ; பிரார்த்தித்தார் சுகமாக்கல் முதலான பல சித்துகள் செய்தார் என்பதை ஒதுக்கிவைத்து விட்டு அவரது வாழ்க்கை வரலாறை வாசித்தால் நுறு பெரியார் ஒன்று சேர்ந்து வந்ததாகத்தான் தெரியும் .
மத்தேயு23
13. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
14. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
16. குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
17. மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
18. மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்மேல் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
20. ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.
23. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் கடுகிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் காணிக்கை செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.
24. குருடரான வழிகாட்டிகளே, கொசுவில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
25. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
27. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
சாஸ்திரங்கள் என்பது வேறு சம்பிரதாய சடங்குகள் என்பது வேறு .
ஒரு சாஸ்திரம் என்ற உண்மையை ; அதை உணர்ந்த ஞானி ஒருவர் உலகிற்கு சொல்லும்போது ஒரு சடங்காக ; சம்பிரதாயத்தின் வழியாக சொல்லியிருப்பார் . அதை பரப்ப ஒரு நிறுவனத்தையும் வழிபாட்டு முறையையும் உண்டாக்கியிருப்பார்
அந்த காலகட்டத்தில் அந்த நாட்டிற்கு அது சரியானதாக இருக்கும் ; சொல்லப்போனால் அதற்கு முந்தய சம்பிரதாயத்தை ஒதுக்கிய ஒரு புரட்சியாகத்தான் இருக்கும் .
இந்த சம்பிரதாயத்தை ; சடங்கை கடைபிடிக்கும் சீடர்கள் அந்த நிறுவனத்தில் பதவியை அடைந்து வாழத்தொடங்குகிரார்கள் . காலப்போக்கில் அந்த சடங்கின் பின்னணியில் உள்ள சாஸ்திரத்தை ஓரங்கட்டிவிட்டு சடங்கை மட்டும் கடைபிடிப்பவர்களாக மாறிவிடுவார்கள் . வறட்டு சூத்திரமாக உண்மையை உணராத சடங்குகள் காலப்போக்கில் பல கலப்படங்களை அடைந்து ஒருநாளில் சாஸ்திரத்திற்கு நேர் விரோதமாக கூட மாறிவிடும் .
அப்போது அந்த நிறுவனத்தை நடத்துகிறவர்கள் ; உண்மையை உணராமல் பிழைப்பு நடத்துபவர்களாக மாறிவிடுவார்கள் . ஒரு காலகட்டத்தில் சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கிய இயக்கங்கள் அனைத்துமே பிற்காலத்தில் பிழைப்புவாதிகளால் நிறைந்து விடுவதை தவிர்க்கவே முடியாது . அப்போது புதிய இயக்கம் வந்தாகவேண்டும் .
மாற்றம் வரும் என்பதில் மாற்றமில்லை என்பது மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாகிய காரல்மார்க்ஸ் ன் வார்த்தை
மாற்றம் அடையாத இரண்டே இரண்டு விசயங்கள் மட்டுமே உண்டு .
அவை 1) கடவுள் 2) அவரால் உண்டாக்கப்பட்ட அனைத்தும் மாற்றங்களை சந்தித்தே தீரும் என்பதும் மட்டுமே
இறைவனின் சகல வெளிப்பாடுகளை அடக்கிய பிரபஞ்சமும் கூட நாளுக்குநாள் வெட்டவெளியில் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது . ஆகவே கடவுள் ஒருவரைத்தவிர அனைத்தும் வளர்சிதை மாறுதலில்தான் உள்ளன .
இவை கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட அல்லது அவரது வாயாக பூமியில் இருந்த மனிதர்களால் வெளிப்பட்ட வேதங்களுக்கும் ; சாஸ்திரங்களுக்கும் ; சம்பிரதாயங்களுக்கும் ; சடங்குகளுக்கும் பொருந்தும் .
இம்மாறுதல்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிறவிகள் தோறும் இயல்பூக்க வளர்ச்சியாகவும் உள்ளது .ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் பட்டறிவுடன் பாவங்களை கடந்தவனாகவோ அல்லது கூட்டிக்கொண்டவனாகவே அவன் அடுத்த பிறவிக்குள் கடந்து போகிறான் . இந்த இயல்பூக்கத்தின் படியாக அவனுக்கு முக்குணங்களுள் ஒரு குணம் மேலோங்குகிறது .
ஆகவேதான் இந்த முக்கியமான கேள்வியும் பதிலும் கீதை 17 ம் அதிகாரத்தில் இயல்பூக்க வளர்ச்சி யோகம் என்பதாக விளக்கப்படுகிறது
கீதை 17 : 2 யுகபுருஷன் கூறினார் : மூன்று விதமான இயல்பூக்கங்களின் கலப்பால் மனித தேகம் உண்டாகிறது . அந்த சுபாவங்கள் சத்வகுணம் ; ரஜோகுணம் ; தமோகுணம் என்பனவாம் . இவைகளுள் நிலைத்து மனிதன் எவ்வாறு விருத்தியாகிறான் என்பதைக்கேள் :
கீதை 17 : 3 ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருக்கும் இருப்புகளுக்கு ஏற்ப இயல்பூக்கங்கள் உண்டாகின்றன .இவைகளுள் எது மேலோங்கியிருக்கிறதோ அந்த குணத்தில் உள்ளவனாக அவன் கருதப்படுகிறான் .
கீதை 17 : 4 சத்வகுணம் உள்ளவர்கள் கடவுளுடனும் அவரைச்சார்ந்த தேவஆவிகளுடனும் ஒத்திசைந்து வழிபடுகின்றனர் . ரஜோகுணத்தில் உள்ளவர்களோ அசுர ஆவிகளுடன் ஒத்திசைந்து வழிபடுகின்றனர் .தமோகுணத்தில் உள்ளவர்களோ இறந்தவர்களையும் பூதகணங்களையும் ஒத்திசைந்து வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு மனிதனிடத்தும் இம்மூன்று குணங்களும் கலந்து கலந்தே இருக்கும் . சத்வகுணம் மேலோங்கியுள்ள சாத்வீகி ஒருவனிடத்தும் ஒரு குறிப்பிட்ட விசயத்தில் இச்சையில் தமோகுணம் நின்று அதைக்கடற முடியாமல் அவன் வழுக்கி விழுந்துகொண்டிருப்பான் . சில விசயங்களில் ரஜோகுணம் வெளிப்பட்டு விடும் .
அந்தந்த குணம் நம்மிடம் செயலாக வெளிப்படும் தருணம் ; அந்த குனத்திற்குரிய ஆவி மண்டல சக்திகள் நம்மிடம் ஒத்ததிர்ந்து நம்மை ஆளுமை செய்ய முயற்சிக்கும் . நம்மை துண்டி விடும் .
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உள்ளது . அண்டத்தின் பின்னணியில்லாமல் பூமியில் எக்காரியமும் நடப்பதில்லை .
ஒரு செயல் செய்யும் படி ஒரு மனிதன் துண்டி விடப்படவேண்டுமானால் அவனிடம் அந்த பதிவு குணம் உள்ளே ஏற்கனவே இருக்கவேண்டும் . இல்லாத ஒன்றை ஆவிமண்டல சக்திகளாலும் அல்லது கிரக இயக்கங்களாலும் துண்டி விட முடியாது .
பக்குவப்படாத மனிதன் உள்ளுணர்வு உண்டானதும் செயல்படத்தொடங்குகிறான் . அதற்கு அவனது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்த முயல்கிறான் . ஆனால் இறை அச்சம் ; கஸ்டட நஸ்ட்டங்களில்அடிபட்ட மனிதன் கொஞ்சம் யோசிக்கிறான் . அப்போது அவனது மற்ற சுபாவங்கள் ;நற்பதிவுகள் அவனுக்கு துனை செய்கின்றன . அந்த போராட்டத்தில் அரைகுறை அச்சத்தோடு அவன் அந்த செயலை செய்தாலும் சுட்டவுடன் திருந்திக்கொள்கிறான் . அது அவனுக்கு பட்டறிவை விளைவித்து ஞானமாக உள்விளைந்து பக்குவப்படுத்துகிறது .
இப்படி முக்குண செயல்பாடுகளின் போதும் அவனுக்குள் ஆவிமண்டல சக்திகளின் ஏவுதல் இருப்பதால் அவைகளுடன் ஒத்திசைவதே ஒரு வழிபாடு என்று இங்கே சொல்லப்படுகிறது
வழிபடுதல் என்றாலே ஏவுதலுக்கு கீழ்பட்டு அச்செயலை செய்தல் ; அல்லது அந்த வழியில் பயணித்தல் என்றொரு பொருள் உண்டு .
வழிபாடு என்றால் கும்பிடுதல் என்ற அர்த்தம் மட்டும் இல்லை . அந்த சக்திகளுக்கு நாம் இடம் கொடுப்பதால் அவைகளின் இயக்கங்களுக்கு ஒத்துழைத்து வாழ்வது வழி படுதல் என்ற பொருளும் உண்டு .
கடவுளின் கருவியாக ஒரு நபர் அத்தாட்சியோடு பிரகடனப்படுத்தப்படலாம் ; அல்லது முன்பு அவதாரங்கள் வந்தார்கள் . அவர்களை அடையாளம் கண்டுகொண்டு முழுக்க அவர்களின் இயக்கத்தோடு நம்மை இனைத்துக்கொள்வது ஒரு வழிபாடே . இதனால் பல ஆத்மாக்கள் பல படிகள் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்
அத்தகைய நபர்கள் பூமியில் இல்லாதபோது அவர்கள் சொல்லியவைகளுக்கு மனித அறிவில் விளக்கம் சொல்லிக்கொண்டு சீடர்கள் பலர் பல தவறுகளை செய்வார்கள்
ஆனால் அவர்கள் பூமியில் இருந்தபோதோ இறைசித்தம் ஒன்றே செய்யப்பட்டிருக்கும் . அப்போது உடன் இருந்தவர்கள் பாக்கியசாலிகளே . அப்போது பூமியில் இருந்தும் அவர் இறைவனின் ஆள் என்பதை புரிந்துகொள்ளாமல் அவரை எதிர்த்தவர்களும் இருக்கத்தானே செய்தார்கள்
ஆகவே நாம் முன்னேறுவது ; எத்தகைய ஆவிமண்டல சக்திகளுக்கு வழிபடுகிறோம் என்பது முக்கியம்
அது நாம் எக்குணத்தில் அதிகநேரம் நிற்க முயற்சிக்கறோம் ; நமது தீய இயல்புகளுடன் எவ்வளவு தூரம் போராடுகிறோம் என்பதைப்பொறுத்தது . அன்றாட வாழ்வில் வேள்வியாக செய்யப்படவேண்டும் . ஆகவே இதுவும் யோகம் நிஸ்டையே .
இந்த சுலோகத்தில் முக்கியமாக மூன்று வகைப்பட்ட ஆவிமண்டல சக்திகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
அவை ;
1)
கடவுளும் அவரைச்சார்ந்த தேவர்கள் அல்லது தேவ தூதர்கள்
2)
அசுர ஆவிகள் 
3)
இறந்துபோனவர்களின் பேரால் செயல்படும் பேய்களும் பூதகணங்களும்.
ஒவ்வொரு சாதாரன மனிதனிடத்தும் அவனது நற்செயல்களில் தேவ ஆவிகளும் தீய செயல்களில் அசுர ஆவிகளும் செயல்படும்
அப்படியில்ல்லாமல் ஒரு ஆவி ஒரு மனிதனை அபிஷேகித்து அவன் மூலமாக விசேஷமாக செயல்படுவதும் உண்டு . அப்படிப்பட்டவர்களே பிரபலமாக இருப்பவர்கள்
எந்த ஒரு தலைவருக்கும் பின்னணியில் ஒரு ஆவி இல்லாமல் இருக்காது பெரிய பெரிய காரியங்களை இப்படிப்பட்டவர்களாலேயே செய்யமுடியும்
அசுர ஆவிகள் நேரடியாக மனிதர்களை தேர்ந்து கொண்டு செயல்படாமல் சில வேலைகளில் இறந்துபோன மனிதனின் ஆத்மாவை சுமந்துகொண்டு ; அவரின் ரூபத்தில் காட்சி கொடுக்கும் ; அருள்வந்து பேசும் . இப்படி நமது முன்னோர் வந்திருப்பதாக கூறி எளிதில் நம்மை அடியவராக்கிவிடும் .
அவைகள் துன்பம் தந்தால் பேய் என்று கூறி உடுக்கடித்து துரத்தி விடுவோம் . நன்மை செய்தால் குலதெய்வமாக சிறுதெய்வமாக கும்பிடத்தொடங்கி விடுவோம் .
தேவர்கள் எப்போதும் இறந்துபோனவர்களின் ரூபத்தில் வரமாட்டார்கள் . ஆனால் அசுர ஆவிகள் மனிதனை ஏமாற்ற இப்படி இறந்தவர்களின் ரூபத்தை பயன்படுத்திக்கொள்கின்றன
நன்மைகள் பல செய்தாலும் உள்குத்தாக நம்மை கடவுளை நோக்கி முன்னேற விடாமல் கட்டி வைத்து விடும்
அதனால்தான் வள்ளல்பெருமானும் சிறுதெய்வ வழிபாடு செய்யாதீர்கள் என்றார்
ஆனால் சமரச வேதம் என்ன சொல்கிறதென்றால் ஆவிமண்டல சக்திகள் பல தரங்களில் பல படிகளில் உள்ளன . இவைகளை பகுத்தறிவது அவ்வளவு எளிதன்று .
யார் கடவுள் என்று ஆராய முயற்சித்து எட்டாத காரியத்தில் தலையிடாதீர்கள் . பெயரை தெரிந்துகொள்வதால் எந்தப்பலனும் இல்லை . யார் என்று தெரிந்துகொள்வதை விட அவரது அருளை பெறுவதுதான் முக்கியம் ; அவரோடு ஒத்திசைந்து வாழ்வதுதான் முக்கியம்
அதற்கு அறியப்பட்ட யார் மூலமாகவும் அறியப்படாத கடவுளை வழிபடுவது என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்பதே சமரச வேதம் . எந்த ஒரு இறைநெறியும் இறைவன் புறத்திலிருந்து வந்ததே . காலப்போக்கில் அதில் மனித கலப்படங்களும் இருக்கும் . ஆகையால் எந்த மார்க்கத்தின் மூலமாகவும் ; சகல மார்க்கங்களின் மூலமாகவும் கடவுளை வழிபடுவது தவறே அல்ல .
எங்கும் செல்லுங்கள் ; அங்கிருக்கும் சக்தியின் மூலமாக கடவுளே என வழிபடத்தொடங்குங்கள் .
ஒருவேளை அந்த சக்திதான் கடவுள் என்றாலும் அதற்கு அவமானமில்லை
யார் மூலமாகவும் கடவுளை வழிபடும்போது ; அவைகள் தேவ ஆவிகளாக இருந்தால் நமக்கு நன்மை செய்யும் . அவைகள் அசுர ஆவிகளாக இருந்தால் அவைகளும் கடவுளிடமிருந்து வந்தவை ஆதலால் நமக்கு தீங்கு செய்யாது ஒதுங்கி சென்றுவிடும் . அல்லது நம்மோடு நல்லினக்கமாகவே இருக்கும் .
இது அனுபவப்பூர்வமான உண்மை . ஆவிமண்டல சக்திகளில் சகலரையும் நல்லினக்கப்படுத்திக்கொண்டு கடவுளை நோக்கி முன்னேறும் சமரச சன்மார்க்க வழி இதுவே .
"எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* - வள்ளலாரின் வாசகப் பெரு விண்ணப்பம்
எத்தேவரும் நின் சாயை வள்ளலார் வேறு தேவர்கள் யாரும் பொய் ; அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்றொரு புதிய கடவுள் இருக்கிறார் என்றா சொல்லியுள்ளார் ; அனைத்து தேவர்களும் கடவுளின் வெளிப்பாடு அவர்களின் மூலமாக கடவுளை வணங்கவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார் .
யார் மூலமாக என்பது அந்தந்த குருபாரம்பரியத்தின் ஆசீர்வாதங்களை கொண்டுவரும் .
ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு குணத்திற்கு அதிபதிகளாக இருப்பதால் சகல தேவர்களின் மூலமாகவும் கடவுளை வழிபடுவது ஏறக்குறைய முழுமையான கடவுளின் இயல்பை அருளை உணர்ந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தும்
கடவுளை கொஞ்சம் உணர்வது மட்டுமே போதுமானதல்ல அவரின் முழுமையை எட்ட வேண்டுமானால் அனைவரின் மூலமாக முயற்சித்தாலே முடியும் .
நாம் கோவில்களுக்கு செல்கிறோம் . அங்கு உள்ள மூர்த்தம் மூலவருக்கு முன்பாக காட்டப்படும் தீபத்தை காண்கிறோம் ; வேண்டுதல் செய்கிறோம் ; நம்மிடம் கொண்டுவரப்படும் தீபத்தை தொட்டு தொட்டு கும்பிட்டுக்கொள்கிறோம் .
பலவகைப்பட்ட சக்திகளின் கோவில்களுக்கும் செல்கிறோம் ; எங்கு சென்றாலும் நம் முன் கொண்டுவரப்படும் தீபத்தை மட்டுமே வழிபடுகிறோம்
சம்பிரதாயமாக சரியான வழிபாட்டையே இந்து தர்மத்தில் செய்கிறோம் ; ஆனால் தவாறாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்
கர்ப்பகிரகங்கள் அனைத்திலும் விளக்கு வெளிச்சம் உள்ளது . அங்கு இருட்டாக இருப்பதால் தீபம் ஏற்றி சிலையை வழிபடுவதாக தவறாக புரிந்துகொண்டோம் .
உண்மை யாதெனில் ; சிலைகள் ஆவாகனப்படுத்தும் பல வகையான சக்திகளை குருவாக வைத்து அவர்களின் மூலமாக ஒரே ஒரு இறைவனை ஒளிமயமானவரை வழிபடுகிறோம்
நாம் கண்ணில் காணும் சக்தியை பார்த்து அதன் மூலமாக கடவுளே உம்மை வழிபடுகிறேன் என ஜோதியைப்பார்த்து பிரார்த்தித்து அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என தொட்டு கும்பிடுவதாக கொஞ்சம் வழக்கத்தை மாற்றிக்கொண்டால் போதுமானது . 

கீதை 17 : 5 வேதங்களின் வெளிச்சத்த்தை புறக்கணித்து அகோராமான தவங்களை மேற்கொள்வோர் ; தன்னுணர்விலும் (சுயத்திலும்) அஹம்பாவத்திலும் விருத்தியடைந்து இச்சைகளின் பலவிதமான வியாபகங்களில் உந்தப்படுகின்றனர்
கீதை 17 : 6 சரீரத்திற்குள் அமைந்துள்ள ஜடமூலக்கூறுகளின் கட்டுமானங்களை ஒடுக்கும் முயற்சியால் அதில் வீற்றிருக்கும் பரமாத்மாவான என்னையும் கடவுளான உயிரையும் துன்புறுத்துகின்றனர் என்பதை அறியாமல் அசுரர்களுக்கு இடம்கொடுக்கின்றனர்
இந்த எச்சரிக்கை ஆன்மீகத்தில் சாதனையை நாடும் நல்லவர்களுக்கே யுகபுருஷனால் சொல்லப்படுகிறது
ஏனென்றால் இந்த மாயை இருக்கிறதே அது அவ்வளவு எளிதாக மனிதர்களை மரணமில்லா பெருவாழ்வை நோக்கி முன்னேற விடாது . அது ஏதாவது வேறு திசையில் மனிதர்களை திருப்பி விட்டு அவர்களின் கடும் முயற்சிகளையும் யோக அப்பியாசங்களையும் ; சாதனைகளையும் ; தவங்களையும் விரயமாக்கி விடும் .
கடும் தவங்களைப்பற்றிய பெருமைகளை வாரிவழங்கி அவர்களை கொடூரமாகவும் கூட தவம் செய்ய வைத்திருக்கிறது
அத்தகையவர்கள் சித்திகள் ; வரங்களை பெற்றவுடன் அற்ப சுயநலத்திற்கு ஏவப்பட்டு அதைப்பயன்படுத்தி அதல பாதாளத்தில் விழுந்த கதைகள் ஒன்றா இரண்டா ?
காலப்போக்கில் இவர்கள் மனித குலத்திற்கும் கொடூரம் செய்யத்தொடங்கி அழிவைத்தேடிக்கொண்டார்கள் அரக்கர்கள் என பெயர் சுட்டப்பட்டு அழிக்கப்பட்டார்கள்
இந்த அரக்கர்கள் அனைவரும் ஆதியில் நல்லவர்களாக ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டவவர்களே . ஓரிரு சித்திகளை பெற்றபிறகு அதனை பயன்படுத்தும் போது வந்த பேரையும் புகழையும் பணத்தையும் பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு சுயத்திற்குள் விழுந்தவர்களே .
சுயம் என்பதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையான தீய குணம் . எல்லாப்புகழும் இறைவனுக்கே என்ற வாசகத்தை முகமது நபி உணர்ந்து சொன்னாரே ; ஆழ்ந்து உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு வாசகம் ; எல்லாப்புகழும் இறைவனுக்கே
அதன் ஆழத்தை உணர்ந்து சகலத்திலும் நம்மை தாழ்த்தி இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும் ; அல்லது கீழ்படியும் ; அல்லது அவரது சித்தத்தை மட்டும் செய்யும் ஒரு கருவியாக மாறுவதே முழு சரணாகதி
எவ்வளவு அறிவு ஞானம் இருந்தாலும் ; அவ்வளவையும் ஓரங்கட்டி சுய சித்தம் எதையும் செய்துவிடாது முழுமுயற்சியோடு இறைவனுக்கு அடிமை ஆகிவிடுவது .
தேவர்கள் அல்லது தேவதூதர்கள் என்பவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் . அவர்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் ; அவர்களை உதவி செய்யுங்கள் என வருந்தி வருந்தி கும்பிட்டாலும் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் . சாட்சியாக மட்டுமே இருப்பார்கள் . இறைவனிடம் கொண்டு சேர்த்து அவரின் உத்தரவிற்கு காத்திருப்பார்கள் . நமக்காக பரிந்து பேசுவார்களே தவிர இறைவனின் உத்தரவில்லாத எதையும் அவர்களாக செய்யமாட்டார்கள் .
ஆனால் அசுரர்கள் அழைத்தால் போதும் தவ்விக்கொண்டு வந்து எதையாவது செய்து மனிதர்களை தங்களுக்கு வழிபடுத்துவார்கள் . உலகாதாய விசயங்களில் சிலவற்றை செய்து கொடுத்து ; அவர்களை வழிபட வைத்து மெதுவே தீமைகளில் தள்ளிவிட்டு விடுவார்கள் .
அசுரர்கள் ; அசுரர்களாக மாறியதே இந்த சுயத்தை செய்யத்தொடங்கியதாலேயாகும் .
அதென்ன கடவுள் மட்டுமே எதையும் செய்வது ; நாங்களும் கொஞ்சம் செய்வோம் ; எங்களுக்கும் சக்தி இருக்கிறது என ஆரம்பித்தே தேவர்களில் சிலர் அசுரர்களாக வீழ்ந்து போனார்கள் .
இந்த வீழ்ந்துபோன அசுரர்கள் ; மனிதர்கள் யாரும் முன்னேறி தேவர்களாக மாறி விடக்கூடாது என்பதற்காக இறை பேரரசுடன் மறைமுகமாக யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் .
அந்த யுத்த களம் மனிதனே .
நம் மூலமாக தேவாசுர யுத்தம் நாளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது .
வெளியே தெரிந்த தீமைகள் அக்கிரமங்கள் கொடுமைகள் என்பதாக மட்டும் அசுரர்கள் மனிதர்களை இயக்குவதில்லை . அகோர தவம் செய்பவர்கள் பலர் இந்த அசுர ஆவிகளின் சித்துக்களை பெற்று அடுத்த பிறவியில் உலகை ஆட்டிப்படைக்கும் அரக்கர்களைப்போல பிறந்து அக்கிரமங்கள் செய்கிறார்கள் (கீதை 17 : 5)
அக்கிரமக்காரர்களுக்கு அக்கிரமத்தை போதிக்கும் அசுரர்கள் நல்லவர்களுக்கு நவீன நாத்திகவாதம் பரப்புரை செய்கிறார்கள் . (கீதை 17 : 6)
அந்த யோகம் செய் ; இந்த யோகம் செய் ; அதன் சூசுமம் அறிந்து கொள்வது எவ்வளவு பெரிய விசயம் . என்னா ஞானம் ; அறிவு ; வித்யை . அப்பப்பா .
குண்டலினியை இப்படி எழுப்பு அதிலே நிறுத்து . பேரானந்தம் வளரும் . அவர் இப்படி பாடியிருக்கிறார் இவர் இப்படி பாடியிருக்கிறார் . இந்த மறைபொருளைபார் . இதில் எவ்வளவு விஷயம் உள்ளது ?
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி தேடியே நாட்களும் போயின
உனக்குள்ளே தான் அந்த ஜோதி இருக்கிறது அதைத்தேடு என்று தேடி தேடினால் நாட்கள்தான் போகும் . அந்த ஜோதி வெளியேயும் இருப்பது எங்கும் இருப்பது நமக்குள்ளும் வந்து கலந்திருக்கிறது என்ற பரந்த உணர்வு உண்டானால் ஒழிய எனக்குள்ளே எனக்குள்ளே என்ற சுயம் போகாது .
நீதான் கடவுள் என்பதை தெரிந்துகொள்வதன் பேர் தான் ஞானமார்க்கம் . ரெண்டு மூச்சுபயிற்சி நாலு உடற்பயிற்சி செய்யக்கற்றுக்கொள் ; பத்து சித்தர் பாடல்களை மனப்பாடம் செய்துகொள் ; பிடி சர்ட்டிபிகேட் நீ ஞானியாகி விட்டாய் . யோகா வியாபாரிகளின் கல்லா நன்றாக களைகட்டுகிறது .
அந்தோ பரிதாபம் ; இவர்கள் பின்னால் நாட்களை கடத்துபவர்கள் எல்லாரும் நல்லவர்கள் . உண்மையின் மீது தாகம் கொண்டவர்கள் . உள்ளார்ந்த உணர்வில் இறைநாட்டம் உள்ளவர்கள் .
ஆனால் ஏதாவது ஒரு யோக அப்பியாசத்தின் தொழிநுட்ப கவர்ச்சியில் ஆழ்ந்து ஆழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று நம்பிக்கை இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள் .
கடவுள் நம்பிக்கையில்லாத சித்தர்கள் ; கடவுள் நம்பிக்கை உள்ள சித்தர்கள் என்று இரண்டு பெரும் பிரிவினரும் ஒன்றோடு ஒன்று கலந்து சித்தர்களாக இன்று அறியப்பட்டு ஆராயப்பட்டு வருகிறார்கள் .
கடவுள் நம்பிக்கை உள்ள சித்தர்கள் பக்தியையும் போதித்தார்கள் . மரணமில்லா பெருவாழ்வை அடையும் காலம் வரை பல ஆண்டுகள் பூமியில் இருந்தார்கள் .
ஓரிடத்தில் வாழ்ந்து தம்மையும் தம்மை அண்டி வரும் சீடர்களையும் கைதூக்கிவிட்டார்கள் . அப்போது உலகாதாய மனிதர்களால் தொந்திரவு அதிகரிக்கும் . அதிலிருந்து தப்பிக்க ஜீவசமாதி அடைந்ததாக காட்டிக்கொண்டு இன்னொரு ஊரில் போய் தோன்றி அங்கும் பல ஆண்டுகள் வாழ்ந்து பலருக்கும் வழிகாட்டி அங்கும் ஜீவசமாதி ஆகி இன்னொரு ஊரில் வெளிப்பட்டிருப்பார்கள்
இரண்டு மூன்று இடத்தில் ஜீவசமாதி ஆகியுள்ள சித்தர்கள் அனைவரையும் பாருங்கள் ; இவர்கள் பக்தி வழிபாட்டையும் போதித்திருப்பார்கள் .
ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத சிலர் ; நானே கடவுள் ; நான் ஜீவசமாதியாகி அந்த இடத்தில் சாகாமல் இருந்துகொண்டே உலகிற்கு நல்லது செய்வேன் ; ஜீவசமாதிதான் உலகத்திலேயே அடையவேண்டிய உன்னத இலக்கு என்பதாக பொய்யையை பரப்பி விட்டார்கள் .
உண்மையை உணராத அழுக்கு சித்தர்கள் என்றொரு வார்த்தையை வள்ளலாரும் பயன்படுத்தியுள்ளார் . அவர் ஜீவசமாதிகளை ஆதரிக்கவில்லை . அது மாயாவாதம் . தவறான இலக்கு .
மரணமில்லா பெருவாழ்வு ஒளி சரீரம் பெற்று தேவராகி பூமியை கடந்து பரலோகம் போகவேண்டும் .
பூமியிலேயே உயிரை வைத்துக்கொண்டு உடலை வருத்தி அடக்கி ஒடுக்கி ஜீவசமாதி இருப்பதால் அந்த ஆத்மாவிற்கு என்ன பயன் ?
இவரும் கடவுளைப்போல ஆகி விட்டார் . இந்த ஏரியாவை காத்துக்கொண்டிருக்கிறார் . இங்கு வருவோர் போவோருக்கு நல்லதை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் . இவரைப்போல நீங்களும் சித்தராகி ஜீவசமாதி அடைந்து ஊர் உலகத்திற்கு நல்லது செய்து பெரும் புகழடையுங்கள் சுயம்
உண்மை என்னவென்றால் ஜீவசமாதியில் இருந்த பலர் செத்துப்போய் அடுத்த பிறவிக்கு போய் விட்டார்கள் . அப்படி அடுத்த பிறவிக்கு போனால் மட்டுமே அந்த ஆத்மாக்கள் அடுத்து என்ன கற்றுக்கொள்ளவேண்டுமோ அதைக்கற்றுக்கொண்டு இறைவனை நோக்கி முன்னேறமுடியும் . அதை இறைவன் சரியாக செய்து அவர்களை வளர்க்கிறார் .
பிறகெப்படி இந்த சித்தர் சமாதியில் ஆற்றல் இருக்கிறது ? நல்ல அலைவரிசை கிடைக்கிறது . ஏறுது இறங்குது வேவ்லெந்து இழுக்குது என்றெல்லாம் சிலர் பேசிக்கொள்கிறார்கள் என்றால் அந்த சரீரத்தில் அசுர ஆவிகள் வந்து உட்கார்ந்துகொண்டு சித்தர்களின் பேரை சொல்லிக்கொண்டு செயல்படத்தொடங்கி விடுகின்றன .
எப்படியேனும் கடவுளிடம் மனிதர்கள் செல்வதை தடுத்து சுயத்தை ; சுய நம்பிக்கையை ; சுய மகிமையை தூண்டி விடவேண்டும் .
கடவுளின் தேவை அவசியமில்லாமலேயே பூமியை சீர்படுத்தி சொர்க்கலோகமாக மாற்ற மனிதனால் முடியும் . யோகம் செய் ; மூச்சை அடக்கி ஏற்றி இறக்கு குண்டலினியை எழுப்பு ; மூலிகையை அறிந்துகொள் சித்தர்களின் பரிபாசைகளை அவிழ்த்து மாபெரும் ஞானியாகி விடு . பிறவாப்பெருநிலை ஜீவசமாதி அடைந்து விடு
ஜீவசமாதி அடைந்தவர்கள் அங்கேயே இருப்பதில்லை கொஞ்ச நாளில் இறக்கிறார்கள் . அதுவரை உடலை வருத்தி அதன் மூலககூறுகளின் கலவைகளை துன்புறுத்தி தனது ஆத்மாவை வருத்திக்கொள்கிறார்கள் . தன்னுள் உறையும் பரமாத்மாவையும் கடவுளையும் துன்புறுத்துகிறார்கள் .
இதற்கு தண்டனையாகவே அவர்களின் அடுத்த பிறவி அமைகிறது . அதில் அவர்கள் சுயத்தை வெறுக்குமளவு பைத்தியங்களைப்போல பூமியை சுற்றிக்கொண்டு சில வருடம் கழிக்கிறார்கள் .
பைத்தியங்களைப்போல கிடைத்த அழுக்கான கந்தலை உடுத்திக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு கிடைத்தால் உண்டு கொண்டு அல்லது வெறும் பீடியை மட்டும் பிடித்துக்கொண்டு தூங்கியும் தூங்காமல் நடந்துகொண்டு உற்றார் உறவினரைப்பிரிந்து சிலர் சுற்றிக்கொண்டே இருக்கிறார்களே .
இவர்களில் சிலருக்கு ஏதாவது கொடுத்தால் நல்லது நடக்கிறது என உலகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை சித்தர் சாமி என்று சிலர் போஷித்து கும்பிடத்தொடங்கினாலும் அதைக்கூட அறியாமல் அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்களே . இவர்கள் எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்ன கற்றுக்கொள்ள இறைவன் இவர்களை இப்படி வைத்திருக்கிறார் ?
சுயம் என்ற பெருமையை விட இப்படி பைத்தியம் போன்ற வாழ்வை அவர்கள் கடந்து செல்லவேண்டியுள்ளது .
இவர்கள் ஜீவசமாதியில் இருந்தவர்களே . அல்லது அதற்கு முயற்சித்து தோற்றுப்போனவர்களே .
ஜீவசமாதி ஜீவசமாதி என உடலை ஒடுக்க பழகினார்களே அதன் விளைவு யாதெனில் பைத்தியங்களோடு பைத்தியங்களாய் உயிரோடு வாழும் நடை பிணங்கள் என்பதற்கு ஒப்ப ஒரு வாழ்வு சில பத்தாண்டுகள் இப்பூமியில் வாழும்படி ஆகி சுயபெருமை என்பதற்கு பட்டறிவை அடையவேண்டியுள்ளது
சுயம் என்ற ஒன்றை விட்டு இறைவனை சரணடைய பழக வேண்டும் . எவ்வளவு ஞானம் பெற்றாலும் அவ்வளவு பக்தி சரணாகதியை கற்றுக்கொள்ளவேண்டும் .
அதற்கு உலகத்தில் அவதாரங்களாலும் இறைவனின் வாயாக வந்த இறை தூதர்களாலும் அந்தந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனமக்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை உரசிப்பார்க்கவேண்டும் . ஆண்டவர் வரும் தருணமிது அதுவரை விசாரம் செய்துகொண்டிருங்கள் என்று வள்ளலார் கூட கட்டளையிட்டாரே அந்த விசாரம் என்பது உலகத்தில் பல மதங்களிலும் மார்க்கங்களிலும் உள்ளார்ந்த அறிவு ஞானம் உண்மைகள் பகுதி பகுதியாக வெளியாக்கப்பட்டுள்ளனவே அவைகளை காதால் கேட்டோ படித்தோ அதில் உள்ள உண்மை என்ன என விசாரம் செய்து கடைபிடிக்க முயலவேண்டும்
சகல மதங்களும் இறைவனால் அவரின் அடியவர்கள் மூலமாக உலகிற்கு வழங்கப்பட்டதே என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் . அவைகளில் பல மனித கலப்படங்கள் காலப்போக்கில் கலந்து விட்டன . எனவே இதுதான் சரி அதுதான் சரி என பிடிவாதம் பிடித்துகொண்டு அலையாமல் அவைகளின் உள்ளார்ந்த உண்மைகள் என்ன என்பதை உரசிப்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .
ஏசாயா 8 : 19. அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
20. வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே செல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
21. இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்
ஜீவசமாதி ஜீவசமாதி என்று அலைவதை இப்போது சிலர் நாகரீகமாகவும் பெருமையாகவும் காட்டிக்கொள்கிறார்கள்
அவர்கள் தேசத்தில் சுற்றித்திரியும் பலரை காணும்போது ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள் ; இந்த வாழ்வால் இவர்களுக்கு என்ன பயன் என நிதானிக்கவேண்டும்

கீதை 17 : 7 ஒருவன் செய்யும் யாகங்கள் ; தானங்கள் மற்றும் தவங்கள் ஏன் உண்ணும் உணவில் கூட அவன் நிலைத்துள்ள குணங்கள் வெளிப்படுகிறது என்பதை அறிவாயாக .
கீதை 17 : 8 ஆயுளை நீடிக்கும் ; வாழ்வை பரிசுத்தமாக்கும் ; மேலும் பலம் ; ஆரோக்கியம் ; சுகம் மற்றும் திருப்தியையும் நல்கும் உணவுகள் சத்வ குணத்தில் நிலைத்தோருக்கு பிரியமானவை . இவ்வுணவுகள் ரசமும் கொழுப்பும் ஊட்டமும் உள்ளவைகளாக இதயத்தை இதப்படுத்தும் .
கீதை 17 : 9 மிகவும் கசப்பானவையும் ; புளிப்பானவையும் ; உப்பும் காரமுமாக வறுக்கப்பட்டவையும் ; சூட்டால் கொதிப்பவையுமான உணவுகள் ரஜோகுணம் நிரம்பியோருக்கு பிரியமளிப்பவை .இவைகள் கோபத்தையும் தாபத்தையும் உண்டாக்கி நோயை வளர்ப்பவை .
கீதை 17 : 10 மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்டு ஊசிப்போன ; சப்பென்று சுவையற்ற உணவும் ; எச்சில் பட்டவையும் ; தீண்டத்தகாத அசுத்தங்கள் கலந்த உணவும் தமோகுணம் நிரம்பியவர்களுக்கு பிரியமளிப்பவை .
சற்குருநாதர் ஸ்ரீகிரிஷ்ணர் உண்ணும் உணவின் தன்மையில் கூட நமது இயல்புகள் வெளிப்படுகின்றன என்பதுடன் அப்படிப்பட்ட உணவுகள் நிச்சயமாக அப்படிப்பட்ட குணத்தை நம்முள் அதிகப்படுத்தும் என்கிறார் .
வளர்ந்து வரும் அதிவேக காலத்தில் ; உணவுகள் புதிய பரிமாணத்தில் பரவலாக அமோகமாக குறைந்த விலையிலும் கிடைக்கின்றன . தள்ளுவண்டிகளில் சிக்கன் ரோஸ்ட்டுகள் காராசாரமாக மதுபானம் அருந்துவோர் முதல் குடும்பத்தினர் வரை பல கிலோக்கணக்கில் சிறிய கிராமத்தில் கூட அன்றாடம் தின்று தீர்க்கிறார்கள் . இதில் ஒரு பெருங்கூட்டமே பிழைக்கிறது . அத்தோடு பறவைக்காய்ச்சல் அவ்வப்போது வாட்டி வதக்கி விடுகிறது . பறவைக்காய்ச்சல் ஒரு ஆவியின் வேலை
இந்த சிக்கனால் உடலில் வெள்ளை அணுக்கள் குறைந்து ; இந்த ஆவி ஏறிக்கொண்டால் உடல் நோவு பிச்சு உதறி காய்ச்சல் போனாலும் அந்த நோவு கனுகனுவுக்கு வலித்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் . கடைசியில் சுண்டு விரலில் நோவாக ஒரு மாதம் கூட சிலருக்கு இருக்கும் .
இந்த சிக்கன் கலாச்சாரத்தைப்போல பாஸ்ட் புட் காலாச்சாரமும் இப்போது எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த கால சூழலில் நாமும் அகப்பட்டு நம்மை அறியாமல் எந்த குணத்தை நம்மிடம் துண்டி விட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை சாதகர்கள் கொஞ்சம் நிதானித்து கடைபிடிக்கவேண்டும் .
வயிறு நமக்கு அடங்கி இருக்காமால் அதற்கு நாம் அடங்கி இருக்கும் வரை யோகம் சித்தியில் பெரிய முன்னேற்றமில்லை .உடலை அன்றாடம் நடத்த எவ்வளவு உணவு வேண்டுமோ அவ்வளவு உண்டால் போதும் .
அதிலும் யோகத்தில் நிலைப்பவனுக்கோ உடல் பரத்திலிருந்தும் உணவை எடுத்துக்கொள்ளும் .வெளியே இருந்து வரும் ஒவ்வொரு உணர்வு மட்டுமல்ல ; உணவும் நமது சத்வ இருப்பை களங்கப்படுத்தவே முனையும் . இவைகளால் பாதிக்கப்படுவது என்பதை கடந்த நிலை அவ்வளவு லேசானது அல்ல ; ஆனால் அனுபவத்தால் அந்த பக்குவத்தை பெற வேண்டும் . அது மனித முயற்சியால் மட்டும் சாத்தியமல்ல ; இறைவனது கிருபையால் பரத்திலிருந்து வரும் ஒத்தாசையால் மட்டுமே முடியும் .
கோவில்கள் ; சத்சங்கங்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் இறைவனிடமிருந்து கிடைத்ததாக மதிப்புடனும் தாழ்மையுடனும் உண்ணப்படவேண்டும் .
அது உண்மையில் பிரசாதமல்ல ; பர சாதம் . பரத்தோடு தொடர்புடைய நம்மை விட உயர்ந்த சக்தி ஒன்றிற்கு படைக்கப்பட்டு அதன் இயல்பு அவ்வுணவோடு கலந்து நமக்கு கிடைப்பதால் அந்த உணவின் பெயர் பரசாதம் . சமஸ்கிரதத்தில் ப்ரசாதம் என்ற உச்சரிப்பை பிரசாதமாக மருவி உச்சரித்து கொண்டுள்ளோம் .
எச்சில் பட்ட உணவு ; அந்த உணவுடன் அந்த நபரின் இயல்பு கலந்து விடுவதாலேயே ஒவ்வாததாகி விடுகிறது . அடிமைத்தனமான தமோகுணம் வளர காரணமாகும் . பல வகையான அடிமைத்தனங்கள் ; நடிகர்களின் மீதான அபிமானங்கள் முதலாக பல கவர்ச்சி மோகங்கள் தமோகுணத்தின் வெளிப்பாடே .
அதே எச்சில் உணவு பரத்திலுள்ள சக்தியின் எச்சிலாக இருந்தால் அது நன்மை அளிப்பவையாக இருக்கும் .
அடுத்து முடிந்த அளவு நம் வீட்டில் மட்டுமே உண்பது ; நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத உணவு .
ஆனால் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் விடுதி உணவுகள் நமக்கு மறைமுகமாக நன்மை பயக்காது .

யாகங்களின் வகைகள் மற்றும் விளைவுகள் :
கீதை 17 : 11 பலன் விளைவில் பற்றற்ற ஞானிகளால் ; யாகங்களின் விதிகளை நிறைவேற்ற என்று விதிகளைப்பின்பற்றி முழு மனதோடு செய்யப்படும் யாகங்கள் சத்வ குணத்தை சார்ந்தவையாம்
சில யாகங்களின் விதிமுறைகள் கடவுளை உணர்ந்த ஞானிகளால் ; முனிவர்களால் ; சித்தர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன . இவற்றை உருவாக்கியவர்கள் பரலோக சக்திகளோடு நெருங்கிய தொடர்பை பெற்றவர்கள் . அந்த ஆவிமண்டல அனுபவ உணர்வால் ; தமக்கு வெளிப்படுத்தப்பட்ட மேன்மையை பலரும் அடைய வேண்டி அதை ஒரு சடங்காக மாற்றி ஒழுங்கு படுத்தி கொடுத்தனர்
இந்த சடங்குகுகளை யாகமாக செய்வதால் அதை செய்கிறவர்கள் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார்களோ அந்த நிலைமையிலிருந்து ஆத்ம முன்னேற்றம் லவ்கீக முன்னேற்றம் அடைய எது தேவையோ அதை இறைவனும் ; இறை சக்திகள் மட்டுமே தீர்மானித்து அந்த நபர்களுக்கு வழங்க முடியும்
என்ன வழங்கவேண்டும் என்பதை பரம் தான் தீர்மானிக்க முடியுமே தவிர அதற்கு செலவு செய்தவர்களால் அதை வற்புறுத்தி பெற முடியாது
அந்த யாகத்தை நடத்திகொடுக்கும் புரோகிதர்களாலும் அதை தீர்மானிக்க முடியாது . ஆனால் காலபோக்கில் அந்த யாகத்தின் உட்பொருள் என்ன என்பதையே உணராத புரோகிதர்கள் தாங்கள் எதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல தங்கள் சிற்றறிவால் விளக்கம் சொல்லவும் ; பலனை பெற்றுத்தந்ததாகவும் அலட்டத்தொடங்கி விட்டனர் . ஆவி மண்டல சக்திகள் அவர்களுக்கு கைவல்யம் ஆகி அவர்கள் சொல்வதை செய்வதாகவும் தங்களுக்கு தாங்களே ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றத்தொடங்கி விட்டனர் .
இதில் செலவழித்தவர்கள் அடைந்த கேடு கொஞ்சம் என்றால் ; அதை ஆள்வதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் புரோகிதர்கள் அடையும் கேடு பல மடங்கு ; அடுத்த பிறவியில் அவர்கள் அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டு பெரும் பாடு படுகிறார்கள் .
புரோகிதர்கள் புரோகிதர்களாக பிறப்பதேயில்லை ; மாகா பாவப்பட்ட குடும்பத்தில் பிறந்து ரஜோகுணம் உள்ளவர்களால் பெரும் துன்பத்திற்காளாகிறார்கள்
சத்வ குணம் என்பது அசந்தால் தமோ குணமாக மாறுமே தவிர ரஜோ குணமாக மாறாது . அதனால் சாத்வீகள் தங்களை அலட்டினால் அடுத்த நொடி தமோ குணத்திற்கு தரம் தாழ்ந்து ரஜோ குனமுள்ளவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களால் ஆட்டுவிக்கப்பட்டு தடுக்கவும் முடியாமல் தப்பிக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு கதறும்படியாக முடியும் . அந்த பட்டறிவு அவர்களுக்கு அலட்டலை விடவைக்கும் . ஆத்மாவில் சுயம் ; அலட்டல் ; பெருமை என்பது சாத்வீகளுக்கு கடவுளிடம் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவது
நான்காவது ஆதிதேவரான நாராயணி யாராலும் அழிக்க முடியாமல் ஆட்டம் போட்ட மகிஷாசுரனை அழித்தாள் என்று வேதங்கள் சொல்கின்றனவே அவை சுய மகிமையால் உண்டாகும் அசுர இயல்பை குறிப்பவையே .
கடவுளை நெருங்கும் ஆத்மாவுக்கு பெரும் எதிரியே இந்த சுய மகிமையே . எந்த வகையிலாவது உண்டாகும் பெருமை மிக தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் முதல் கடவுளை நெருங்கிய ஆத்மாக்கள் வரை அழிக்கவே முடியாத எதிரியாக சுய மகிமை என்ற அசுர இயல்பு முழைத்து விடுகிறது
ஆகவேதான் சற்குருநாதர் ஸ்ரீகிரிஷ்ணர் இந்த சுலோகத்தில் யாகம் செய்வோர் யாகத்தின் பலன்கள் விளைவுகள் பற்றி அலட்டாமல் யாகவிதிகளை நிறைவேற்ற யாகம் செய்து விட்டு அதை கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள் என்று வழிகாட்டுகிறார்
ஒரு யாகம் நடத்தப்படுகிறதென்றால் அங்கு இறைவனால் முன்குறிக்கப்பட்ட பல ஆத்மாக்கள் தற்செயலாக கூட அங்கு வந்திருப்பார்கள் ; அவர்களுக்கு ஆத்ம முன்னேற்றம் உண்டாக்கப்படும் . அவ்வாறு அழையா விருந்தாளியாக அங்கு வந்தவருக்கெல்லாம் பலன் கிடைக்கும் போது அதை பெரும் பொருட்செலவில் செய்தவர்களுக்கு ; நடத்தி கொடுத்தவர்களுக்கு பலன் இல்லாமலா போகும் ; ஆனால் அதை நாம் மனதில் கருதலாகாது என்பதுதான் இங்கு எச்சரிக்கை
பலன் விளைவில் பற்றில்லாது உலக நன்மைக்காக ; அங்கு தற்செயலாக வந்திருக்கும் ஆத்மாக்களின் முன்னேற்றத்திற்காக என்று யாகங்கள் செய்யப்படவேண்டும் . ஆத்ம முன்னேற்றம் என்பது இறை பேரரசின் பணி . சகல ஆத்மாக்களையும் வளர்க்கும் பொறுப்பில் உள்ள இறைபேரரசு ; தனக்கு கருவியாக இருந்த சத்வ யாகத்திற்கு பெரும் பலனளிக்கும்
ஆனால் அப்படியில்லாமல் ரஜோகுணத்தோடும் ; தாமச குணத்தோடும் யாகங்கள் செய்யப்படுகின்றன என கீதை இங்கே விவரிக்கிறது . இந்த யாகங்கள் இறைபேரரசுக்கு ஒத்திசைவான யாகங்கள் அல்ல ; மாறாக இறைவனுக்கு முரண்பாடான யாகங்கள் . அவைகளில் நம்பிக்கை உண்டாக்க அந்த யாகங்களுக்கு பலனை அசுர ஆவிகள் முன்னிருந்து கொடுத்து ஊக்குவிக்கும் ; ஆனால் முடிவு என்னவோ ஆத்மாவில் பின்னேற்றம் உண்டாகி அடுத்த பிறவி துன்பப்படவேண்டியதாகி விடும் . காரணமே அறியாமல் சில ஆத்மாக்கள் மன நோவிலேயே இருப்பார்கள் . எவ்வளவோ ஆன்மீக தேடல் செய்தும் மனம் சஞ்சலத்திலேயே கழிப்பார்கள் ; இறை பேரானந்தம் அடைய முடியாது அங்கும் இங்கும் அலைவார்கள் . முந்தய பிறவியில் புரோகிதம் செய்த பலர் இப்பிறவியில் இப்படி இருப்பார்கள்
கீதை 17 : 12 பெரும் முயற்சியுடன் ஆனால் பலன் விளைவு கருதி ; தற்பெருமையுடனும் கூட சிலரால் யாகங்கள் செய்யப்படுகிறது . பரதவர்களின் தலைவனே ; அவைகள் ரஜோகுண யாகங்கள் என்றறிக .
கீதை 17 : 13 சாஸ்திர விதிகளை முழுமையாக பின்பற்றாமல் ; வேத மந்திரங்களின் உச்சாடனமும் முழுமையாக செய்யாமல் ; ப்ரசாத விநியோகமும் போதிய அளவு செய்யாமல் ; புரோகிதர்களுக்கும் கூட போதிய தட்சிணை கொடுக்காமல் உள்ளார்ந்த நம்பிக்கையும் இல்லாமல் பெயரளவில் யாகங்களும் செய்யப்படுகின்றன ; அவை தமோ குண யாகங்கள் என்றறிக .
யாகங்கள் செய்வதிலும் இவ்வளவு பிரச்சினையா என்று சிந்திக்கும் அளவு இந்த சுலோகங்கள் உள்ளன அல்லவா ? ஆனால் இவை தெளிவை தருபவையே .
யாகங்களை வடிவமைத்தோர் அவர்கள் தெளிவாகவே அதை வடிவமைத்தார்கள் . ஆனால் அவைகளின் மறை பொருள் என்ன என விளங்க முயற்சிப்பதோ அல்லது விளக்குவதோ மனிதர்கள் செய்கிற தவறாக முடிகிறது . எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது
இப்படி சிலரால் இன்னின்ன பலன் விளையும் என விளக்கம் சொல்லப்பட்டு அதை நம்பி சிலர் அந்த சாஸ்திரங்களை முழுமையாக நிறைவேற்ற சிரத்தையோடு பொருட்செலவும் செய்து நிறைவேற்றுகிறார்கள் . இது பாராட்டத்தக்கதுதான் ; ஆனால் பலன் என சொல்லப்பட்டதும் அறியாதவர்களின் அரைகுறை விளக்கமாக இருக்க அது நடக்கும் என எதிர்பார்த்து செய்ததே ஒரு தவறாக இந்த யாகங்கள் கேடுகளை உண்டாக்குகின்றன என்பதே ஸ்ரீகிரிஷ்ணரின் எச்சரிக்கையாக இருக்கிறது ; இந்த ரஜோகுண யாகங்களை கூட கொஞ்சம் பரவாயில்லை என சொல்லலாம் ஆனால் தமோகுண யாகங்களோ பெரும் கேட்டில் முடிபவை
பலர் செய்கிற யாகத்தை பற்றி கேள்விப்பட்டு சிலர் புரோகிதர்களை அணுகுகிறார்கள் ; இவ்வளவு பணத்திற்குள் இதை செய்யுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள் ; சரி சரி அதற்குள் முடிப்போம் என பல அரைகுறை யாகங்களை புரோகிதர்களும் நடத்தி வைக்கின்றனர் . இவை பெரும் பின்னடைவை உண்டாக்குகின்றன ; நானும் யாகம் செய்தேன் என்ற பெயரில் பல கேடுகள் வந்தடைகின்றன
ஆக இவைகளில் நாம் பெற வேண்டிய படிப்பினை யாதெனில் யாகம் செய்வதாக இருந்தால் சிரத்தையோடு என்ன பலன் என்பதைப்பற்றி கவலைப்படாமல் யாகங்களுக்காக யாகத்தை செய்யவேண்டும் . பலனை கடவுளுக்கு அர்ப்பணித்து விடவேண்டும்
அல்லது யாகங்களை யோகங்களாக கடவுள் ஏற்கனவே மாற்றம் செய்துகொண்டார் என்ற ஸ்ரீகிரிஷ்ணரின் அறிவுரைக்கு கீழ்படிய வேண்டும்
பொருட்களின் வழி யாகங்களா ? யோகங்களின் வழி யாகங்களா ?
கீதை 3:10 படைப்பின் துவக்கத்தில் கடவுள் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்து மனிதர்களுக்கு உண்ணத்தக்க கால்நடைகளையும் படைத்து ஆசிர்வதித்தார் ! அவற்றை கடவுளுக்கான யாகங்களாக -- பாவ நிவாரண ;குற்ற நிவாரண பலிகளாக செலுத்தி கடவுளோடு ஒப்புறவாகும் மார்க்கத்தையும் உயிர்ப்பலி இட்டு அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கவும் அருள் செய்தார் !!
கீதை 3:11 தேவதூதர்களில் அசுரர்கள் ஆனவர்கள் மனிதர்கள் தங்களுக்காக பலிசெலுத்தி வழிபடுவதில் மகிழ்ந்து மனிதர்களின் பலவகை இச்சைகளை நிறைவேற்றுவதும் ;அதனால் அசுரர்களுக்கும் மனிதர்களுக்கும் இணக்கம் உண்டாகி அசுரர் ஆளுமை செய்வதுமாய் ஆயிற்று !!
கீதை 3:12 உலகியல் வாழ்வின் மோஹங்களுக்காக ; அசுரர்களை யாகங்காளால் திருப்தி படுத்துவதும் அசுரர்கள் மனிதர்களின் ஆடம்பர அலங்கார, ஆட்சிகளை நிறைவேற்றுவதுமாய் ஆனது ! அது கடவுளுக்கு சேரவேண்டிய மஹிமையை அசுரர்கள் திருடுவதாயிற்று !!
கீதை 3:13 அப்படியில்லாமல் முழுமுதல் கடவுளுக்கே முதல்மரியாதையாக யாகங்கள் --உயிர்ப்பலி செலுத்தி அதனை உண்ட அவரது நல்லடியார்கள் எல்லா பாவங்களிலிருந்தும் வீடுபேறு அடைந்தார்கள் ! மற்றவர்களோ தங்கள் சுய இச்சைகள் நிறைவேற யாகங்கள் செய்து பாவத்தையே உண்டார்கள் !!
கீதை 3:14 அதனாலேயே விதிக்கபட்ட கடமைகளில் யோகங்களாக யாகங்கள் நிலைமாற்றம் செய்யப்பட்டன !இத்தகைய யோகங்கள் வழியான யாகங்களே மழை பெய்ய காரணமாகிறது ;அந்த மழையினால் உணவுதாணியங்கள் உண்டாகி அனைத்து உயிரிணங்களுக்கும் ஆதாரமாகிறது !!
கீதை 3:15 ஒழுங்குபடுத்த பட்ட கடமைகள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன !அந்த வேதமோ முழுமுதல் கடவுளால் வெளிப்படுத்தபட்டவை !அத்தோடு உண்ணதமான தெய்வீக இயல்புகள் யோக நெறிமுறைகளில் பொதிந்துள்ளன!!
கீதை 3:16 எனதருமை அர்ச்சுணா ! வேதங்கள் காட்டுகிற யோக நெறிமுறைகளை வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் கடைபிடிக்காதவர்கள் பாவம் நிறைந்த பாதையிலேயே நடந்து வெறும் புலனிச்சைகளுக்காகவே வாழ்ந்து துக்கசாகரத்தில் மூழ்குகிறார்கள் !!
கீதை 3:17 யார் வாழ்வு நெடுகிலும் தன்னை தானே உணர்கிறவனாய் ; தன்னில்தானே நிலைத்து திருப்தியுற்று ; தெய்வீக சமாதானம் எய்தியவன் பரிபூரணத்தை எட்டுகிறான் !அவன் செயல் செயலின்மையை கடந்தவனாகிறான்!!
கீதை 3:18 பரிபூரணமடைந்த மனிதனுக்கு ; விதிக்கபட்ட கடமைகளை நிறைவேற்ற பாடுபடுதல் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை ! அல்லது அக்கடமைகளை நிறைவேற்றாமலிருக்க காரணங்களும் இல்லை ! அல்லது எதற்காகவேனும் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமுமில்லை !!
கீதை 3:19 ஆகவே பலன் விளைவுகளில் பந்தப்படாமல் செயலுக்காக செயலை ஒருவன் செய்துவரவேண்டும் !அப்படி பற்றில்லாமல் செயல்படுவதால் ஒருவன் கடவுளை அடைகிறான் !!
கீதை 3:20 விதிக்கபட்ட செயல்களை செய்வதன் மூலமாக ஜனகர் போன்ற அரசர்கள் பூரணத்தை எய்தினார்கள் ! நீயும் அதுபோல பொதுமக்களுக்கு கற்றுகொடுக்கும் பொறுப்போடு கடமையை செய்வாயாக !!
கீதை 3:21 தலைவர்கள் எவ்வழியோ பொதுமக்களும் அவ்வழியே செல்கிறார்கள் ! முன்னுதாரமான செயல்பாடுகளில் தலைவன் என்ன தரத்தை வெளிப்படுத்துகிறானோ அதனையே அனைவரும் பின்பற்றுவார்கள் !!
கீதை 3:22 பிரதாவின் மகனே !மூவுலகங்களிலும் எனக்கு விதிக்க பட்ட கடமைகளும் ஏதுமில்லை ! நான் விரும்புகிறவைகளும் ஏதுமில்லை ! எதையாவது பெற்றுகொள்ள வேண்டிய அவசியமுமில்லை ! இருப்பினும் செயல்களில் ஈடுபட்டவனாகவே இருக்கிறேன் !!
கீதை 3:23 பார்த்தா ! என் மேல்வந்த கடமைகளை அக்கறையுடன் செய்துகொண்டிருப்பதை ஒருவேலை நான் நிறுத்தினால் முழு உலகமும் என்னை பின்பற்றி பொறுப்புகளை தட்டிகழிக்காதா ??
கீதை 3:24 நான் செயல்படுவதை நிறுத்தினால் முழு உலகமும் சீரழிவில் விழுந்து வேண்டாத குழப்பங்கள் உருவாக காரணமாகிவிடுவேன் ! அதனால் உயிரிணங்கள் அனைத்தினதும் நிம்மதியை கெடுத்தவனாவேன் !!
கீதை 3:25 ஞானமில்லாதோர் பலன் விளைவுகளில் பற்று கொண்டோராய் செயல்பட்டால் ; வெளிப்பார்வைக்கு அறிவுள்ளோரும் அதேமாதிரியாகவே செயல்பட வேண்டும் ---உள்ளார்ந்து பலன் விளைவுகளில் பந்தமில்லாதவராக ! ஏனெனில் பொதுமக்களை உய்விக்கும் கடமை ஞானமுள்ளோர் மீதே உள்ளது !!
கீதை 3:26 கிரிஸ்ண தெளிவை கற்றுணர்ந்த ஞானமுள்ளோர் ; பலன் கருதி பணியாற்றும் ஜனங்கள் மேலும் கெட்டுபோகாதபடி கடமையை தட்டிகழிக்க பழக்கலாகாது ! மாறாக கடவுளுக்கு அர்ப்பணமாக ; செயலுக்காக செயல் புரிந்து ஜனங்களை எல்லா வகையான செயல்களையும் செய்கிறவர்களாய் பழக்கவேண்டும் !!
கீதை 3:27 மூவகை(சத்துவ, ரஜோ &தாமச) குணங்களால் மயக்கமுற்றிருக்கும் ஆத்துமாக்கள் ; உலகிலே நால்வகை தொழிலிருந்து இயற்கையாக எழும்பும் செயல்பாடுகளை தாமே திட்டமிட்டு ; நிர்வகித்து செயல்படுவதாக நம்பிக்கொண்டுள்ளனர் !
கீதை 3:28 போர்க்கலையில் வல்லவனே !மெய்யறிவில் நிலைத்த ஆத்துமாக்களோ கடவுளுக்கு அர்ப்பணமாக செயல்படுவதற்கும் பலன் விளைவில் பற்று கொண்டு செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் ! புலன்களுக்கும் புலன்இச்சைகளுக்கும் ஆட்பட்டு அதற்காக செயல்படுவதிலிருந்து தம்மை விடுவித்து கொள்கிறார்கள் !!
கீதை 3:29 நால்வகை தொழிலின் இயல்புகளால் குழம்பிய ஆத்துமாக்கள் ;அறியாமையால் உலகியல் செயல்பாடுகளை சாசுவதம் என நம்பி அதற்கு பந்தப்பட்டு கொள்கிறார்கள் ! ஞானமின்மையால் கீழ்னிலையடைந்த அவர்களின் செயல்பாடுகளை ஞானமுள்ளோர் ஒருபோதும் தடைசெய்யலாகாது !!
கீதை 3:30 ஆகவே அர்ச்சுணா ! கடவுளின் மீது மனம் நிலைத்தவனாய் ; அவரை முற்றிலும் சரணடைந்து தான்தனது என்ற அகம்பாவத்தை விட்டுவாயாக ! மனதாழ்மையுடனும் கவணத்துடனும் போரிடுவாயாக !!
கீதை 3:31 யார் எனது அறிவுறுத்தல்களை மனமுரண்பாடின்றி பக்திபூர்வமாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்களோ அவர்களே பலன்விளைவில் பற்று கொண்ட செயல்பாடுகளின் பந்தத்திலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவர் !!
கீதை 3:32 யார் மனமுரண்பாட்டால் இந்த அறிவுறுத்தல்களை அவமதித்து ; பின்பற்ற மறுக்கிறார்களோ அவர்கள் எல்லா அறிவையும் இழந்து மதியீணராய் இருளுக்குள் அமிழ்ந்து அழிவை அடைவது திண்ணம் !!


தவங்களின் வகைகள் மற்றும் விளைவுகள் :

1) சத்வகுண தவம்

கீதை 17 : 14 இறைவனை நோக்கி நம்மை உந்தித்தள்ளும் குருமார்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் மதிப்பளித்தல் ; இறை வழிபாடு ; தூய்மை ; எளிமை ; இறை சட்டங்களான வேதங்களை கடைபிடித்தல் ; அஹிம்சை ; இவையே சரீரத்தின் தவங்களாம்

கீதை 17 : 15  உடனடியாக கொப்பளிக்கும் வார்த்தைகளை தவிர்க்கும் நிதானம் ; முடிந்தளவுக்கு நன்மையை விளைவிப்பதும்  நல்லினக்கமானதுமான இறைசித்தமான வாக்கை பேசுதல் ; எல்லா வேதங்களையும்  முறையாக அப்பியாசித்து உணர்ந்து அவற்றின்  மேன்மைகளை கலந்துரைடல்  ; இவையே வாக்கின் தவங்களாம்

கீதை 17 : 16 எப்போதும் மனச்சமநிலை ; மன நிறைவு ; பிறர்மீது வஞ்சகம் தவிர்த்த சாந்தம் ; அமைதி ; சகல பாவ சிந்தனைகளையும் உள்ளத்திலும் சுத்தி செய்து ஆத்ம சுத்தி அடைய முயற்சித்தல் ; இவையே மனதின் தவங்களாம்

கீதை 17 : 17 பரத்தை அடையும் இலக்கில் ; பலன் விளைவில் பற்றை கலைந்த மனிதர்களால் மேற்கண்ட மூன்று தவங்களும் சிரத்தையோடு அப்பியாசிக்கப்படுவதே சத்வகுண தவங்களாகும்

இப்போது நாம் இருக்கும் நிலையில் யார் நம்மை இறைவனை நோக்கி உந்தித்தள்ளும் படி இறைவனால் பயன்படுத்தப்படுகிறார்களோ அந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அணுக்கமாக முடிந்தளவு தொண்டு செய்தல் ; நமது தாய் தந்தை உள்ளிட்ட பெரியோர்களுக்கு மதிப்பளித்தல் ; சரீரத்தால் இறைவனுக்கு பூஜை செய்தல் ; தியானம் செய்தல் ; வேதங்களை வாசித்தல் ; உபதேசங்களை கேட்டல் ; பக்தி சுவை செறிந்த பாடல்களை கேட்டல் முதலிய வழிபாடுகளில் நேரத்தை செலவிடுதல் ; ஆடை ஆபரணங்களில் எளிமை மற்றும் தூய்மை ; பிறருக்கு முடிந்தளவு துன்பம் தராத வாழ்க்கை என்பவை உடலால் செய்யப்படும் தவங்கள் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் . இவற்றை சரியை என்றும் சொல்வார்கள் . உடலைக்கொண்டு செய்யப்படும் இறைவழிபாடு சரியை .

சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உணர்வு வயப்பட்டு சட்டு சட்டென்று பேசும் படியான வார்த்தைகள் எல்லா மனிதருக்கும் கொப்பளிப்பது இயல்பு . உணர்வு வயப்பட்ட நிலையில் அவை அவசியமானதுபோல தோன்றும் . ஆனால் மனித சுய முயற்சியால் நமது நலன்களை நாமே காத்துக்கொள்ள போராடுவது என்ற தாழ்ந்த படி நிலைமை இது . கடவுளோடு இயைந்து வாழ பழகும்போது ; உடனடியாக செயல்படாது இப்பிரச்சினைகளை இறைவன் சமூகத்தில் வைத்து விட்டு அவர் செயல்படட்டும் என்று இருக்கும் போது எல்லா பிரச்சினைகளையும் இறைவன் சுமூகமாகவும் எளிமையாகவும் அதிகம் பேசாமலும் மன உளைச்சல் இல்லாமலும் யாருக்கும் நட்டம் இன்றியும் தீர்த்து வைப்பதை அனுபவத்தில் காண முடியும்  
ஆரம்பத்தில் இறைவன் செயல்பாடு நமக்கு பிடிபடாதது போல தோன்றினாலும் நாம் அவருக்காக காத்திருக்க காத்திருக்க அவர் விரைவாகவே செயல்படுவது நமக்கு பிடிபடும் . அப்போது மட்டுமே அவரை உண்மையாகவே சார்ந்து வாழ நம்மால் கற்றுக்கொள்ள முடியும்

சகலரையும் போஷித்து வளர்க்கும் பிதாவானவர் எல்லோருக்கும் நன்மையாக ஒவ்வொரு காரியத்தையும் எப்படி நடத்துகிறார் என்பது பிடிபடும்போது மட்டுமே இறை சித்தத்திற்கு ஏதுவான வார்த்தைகளை மட்டும் பேசும் இயல்பும் நமக்குள்ளாக வளரும்

இவைகளில் தொடர்ந்து நிலைத்திருக்க இறைவனால் தனது வாயாக பயன்படுத்தப்பட்ட அனைத்து மத இறைமனிதர்களின் வார்த்தைகளையும் வேதங்களையும் நாம் இடைவிடாது வாசித்து வாசித்து நம்மை செழுமைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்

எல்லா வேதங்களிலும் பகுதி பகுதியாக சூழ்நிலைக்கு ஏற்ப வெளியாகியுள்ள வேதங்களின் மேன்மைகளை நாம் உணர்ந்து அவற்றை பகிர்ந்து கொள்ளுகிற பாத்திரமாக நம்மை இறைவன் பயன்படுத்தும் நற்பேறு கிடைக்க வேண்டும் இவை மனத்தால் செய்யப்படும் தவங்களாம் . இதுவே கிரியை எனப்படுகிறது .

அன்றாட வாழ்வில் நாம் இறைவனின் பாடத்தை கற்றுக்கொள்வதும் ; இறைவன் பிறருக்கு கொடுக்கும் பாடத்திற்கு பயன்படுவதும் ஆகிய ஆன்மீக வாழ்வு ; இறை அன்பு நமக்குள் விளையும்போது எப்போதும் மனச்சமநிலை நமக்கு சித்திக்கும் . எதற்கும் பிறர்மீது வஞ்சம் இல்லாத சாந்தம் ; பேரானந்தத்தால் நிறைந்த மனம் ; அமைதி இவற்றொரு உள்மனதில் உறைந்துள்ள பாவ சிந்தனைகளையும் இனம் கண்டு அவற்றை கடந்து ஆத்ம சுத்தி அடைதல் ; இதன் மூலமாக நாளும் நாளும் பரத்தை நோக்கி உயரும் வளர்ச்சி – இவையே மனதின் தவங்களாகும் . உண்மையில் மன சுத்தியே யோகம் . ஆத்மா சுத்தியடைய சுத்தியடைய யோகம் கைகூடும் .

சரியை ; கிரியை ; யோகம் என்ற மூன்று முறையாலும் ஒரு ஆத்மா பரத்தை அடையும் இலக்கு என்பதற்காக வாழும் போது ; பலன் விளைவுகள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விட்டு அவரால் வழங்கப்படும் மரணமில்லா பெருவாழ்வு , ஒளி சரீரம் . பரலோக அனுமதி இவற்றிற்காக உழைக்கும்போது வாழ்வே சத்வ குண வகைப்பட்ட தவமாக பரிணமிக்கிறது

ஆனால் இவ்வாறில்லாமல் ரஜோகுண வகைப்பட்ட ஆன்மீக வாழ்வும் தமோகுண வகைப்பட்ட ஆன்மீக வாழ்வும் உலகத்தில் உள்ளது

இவர்களும் இறைவனின் தொடர்பில் இருந்தாலும் பகுதி இறைவனுக்கும் பகுதி அசுரனுக்கும் இடம் கொடுத்து விட்டு வாயிலே மட்டும் இறைவன் என்று இறைவனுக்காக வாழ்வதாகவும் நம்பிக்கொள்கிறார்கள்

இவர்கள் பல பிறவிகள் எடுத்து அடி உதை பட்டு தாழ்மையடையாமல் கற்றுக்கொள்ளமாட்டார்கள் . ஆனாலும் ஆன்மீக முன்னேற்றம் என்பதை இவர்கள் ருசி பார்க்காமலேயே பல பிறவிகள் கழிந்து விட வாய்ப்பு உள்ளது

இவர்களைப்பற்றிய எச்சரிக்கையையும் ஸ்ரீகிரிஷ்ணர் அடுத்து வழங்கியுள்ளார்

2)ரஜோகுண தவம்

கீதை 17 : 18 தற்பொழிவு ; சுயதிருப்தி ; புகழ் உண்டாவதால் ஈர்க்கப்பட்டு தற்பெருமையோடு செய்யப்படும் தவங்கள் ரஜோகுணத்தில் வெளிப்படுபவையாகும் . இவற்றால் சஞ்சலங்கள் உண்டாகி தவங்கள் தடைபட்டுபோம்

யோகங்கள் செய்வதால் உடல் நிலை சீராகவும் அறிவுகூர்மையும் அடைந்து  இன்னும் சிறப்பாக வாழ்வில் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதை இன்று யோகா வியாபாரிகள் பிரபலபடுத்தி வருகின்றனர் .  இது ஓரளவு உண்மையும் பலனும் கொடுப்பவையே . தமோகுண வகைப்பட்டு உடலின் தேவைகளுக்காக மட்டுமே சாப்பிட்டேன் தூங்கினேன் சினிமா பார்த்தேன் டாஸ்மார்க் போனேன் என வாழும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தன் மன நிலையை ஓரளவு கட்டுப்படுத்தி அறிவை சீர் செய்து ஒரு தரமான தன்மான வாழ்வு வாழ யோககலைகள் நிறையவே பலன் கொடுக்கின்றன . ஆனால் இவை சுயமுன்னேற்றம் ; சுய நம்பிக்கை என்பதையே சார்ந்து இருப்பதால் மனித முயற்சிக்கும் அப்பற்றபட்ட ஊழ்வினைகளை இறைவனால் மட்டுமே சரி செய்யமுடியும் என்பதை மறைக்கின்றன . இவைகள் பக்தி ; தாழ்மை என்பதை கற்றுக்கொடுக்காமல் இயற்கை மனித முயற்சி சமூக சீர் திருத்தம் என்பதாக நவீன நாத்திக வாதமாக தடம் பிரளுவதே பிரச்சினையை உருவாக்குகிறது

இந்த நவீன நாத்திகவாதிகளால் ஒருவர் ஓரளவு ஆன்ம வாழ்வில் தேரியபிறகு அவரை அவரது ஊழ்வினைகள் அழுத்துபோது அவர்கள் சஞ்சலத்தில் விழுவது தவிர்க்கமுடியாததாகிறது . அப்போது தன்னம்பிக்கை விழித்தெழு உலகை திருத்து என்பதெல்லாம் அடங்கி ஒடுங்கி விடுகிறார்கள் . அப்போது சிறிது காலம் யோககலைகள் ; தியான பயிற்சிகள் தடைபட்டு போனாலும் அவர்கள் தாழ்மையடைந்து பக்திக்குள்ளாவார்கள் . அந்த பக்தியில் ; பிரார்த்தனையில் இந்த தியான பயிற்சிகள் ஒரு புதிய பரிணாமத்தில் வெளிப்படும்

தியானப்பயிற்சி இல்லாதவர்கள் பிரார்திப்பதற்கும் ; தியானப்பயிற்சி உள்ளவர்கள் பிரார்திப்பதற்கும் நிறைய வேறுபாடுகளை இறைவன் காட்டியே வருகிறார் .

சுயநம்பிக்கை ; யோகம் மட்டுமே முக்தியை கொடுத்துவிடும் குண்டலினியை ஏத்தினால் போதும் உச்சியில் நிறுத்தினால்போதும் என்ற ரஜோகுண வகைப்பட்ட தவங்கள் ; இறைவனை கொஞ்சம் ஓரந்தள்ளியவை என்ற குறைபாட்டை தவிர அதை இறைவன் சரியான திசைக்கு கொண்டுவந்து சேர்ப்பார் என்ற ஆறுதலும் அதில் உள்ளது . ஏனென்றால் இவை தன்னை சீர்திருத்துதல் என்ற இயல்பில் தன்னை உணர்தல் என்ற பயிற்சிக்கு மிகவும் உதவியாகவும் இருப்பவை ; இவைகளைவிட மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் தவங்களும் உள்ளன ; அவையே தமோகுண வகைப்பட்ட தவங்களாகும் .

3)தமோகுண தவம்

கீதை 17 : 19 தன்னை வருத்தி ஆத்மாவை துன்புறுத்தி சித்திகளை அடையும் தவங்கள் தமோகுண வகைப்பட்டவையாம் . முட்டாள்தனமான இத்தகைய தவங்கள் தனக்கும் பிறருக்கும் அழிவையே விளைவிப்பவை .

சித்திகளை அடைய வேண்டி மிக கடும் தவங்கள் செய்யப்பட்டால் ; அவையும் சிலகாலம் சித்திக்கும் . ஆனால் அந்த சித்திகள் பலன் விரும்பி பயன்படுத்தப்படும்போது பிறருக்கு பல கேடுகள் உண்டாகி பாவத்தையே சம்பாதிக்கும் . உலக நன்மைக்காகவே பயன்படுத்துகிறேன் என்றாலும் அது எப்படியாயினும் சிலருக்கு கேடுகளை துன்பங்களை கொடுப்பதை தவிர்க்கவே முடியாது

இறைவன் சொல்லாமல் ஒரு நபருக்கு உதவுவது என்பது கூட அந்த ஆத்மாவை பக்குவப்படுத்தும் இறைவனின் நோக்கத்திற்கு நாம் இடைஞ்சல் செய்ததாக ஆகி விடும்

ஆகவேதான் இந்த சித்திகள் எதற்கும் ஆகாதவை என்பதாக ஞானிகள் சொல்கிறார்கள் . சித்திகளை விரும்பி கொடூரமான தவங்களில் ஈடுபடுவதை முட்டாள்தனமானது என்றே யுகபுருஷன் ஸ்ரீகிரிஷ்ணர் கண்டிக்கிறார் . ராஜயோகம் சித்தித்தவர்கள் கூட எவ்வளவோ சித்திகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் இறைவனிடம் சரணாகதி ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணங்கள் நிறைய உள்ளன .

அவர்கள் எவ்வளவோ இருந்தும் ஒன்றும் இல்லாதவர்களின் மன நிலையிலேயே இருந்தார்கள் . வள்ளலார் ; ராமகிருஷ்ண பரஹம்சர் , முகமதுநபி போன்ற எண்ணிறந்த ஞானிகள் சமீபத்திய உதாரணங்கள் . எந்த நிமிடமும் பின்னே விழுந்து பிறவிகள் நீண்டு விடுமோ ; மரணமில்லா பெரு வாழ்வு என்ற தகுதி பெற்று பரலோகத்தில் தேவதூதானாக நுழைய முடியாமல் போய் விடுமோ என கடைசி நேரம் வரையிலும் அவர்கள் இறைவனிடம் அஞ்சிக்கொண்டுதான் இருந்தார்கள் .

அப்படியில்லாமல் சித்திகளை உலகத்தில் செயல்படுத்தி விழுந்துபோனவர்களின் பட்டியல் இரண்யன் ; இராவணன் என்று நீண்டுகொண்டே உள்ளது . இப்படிப்பட்டவர்கள் மிகுந்த தமோகுணத்தில் வீழ்ந்து ; கீழான குணங்கள் நிரம்பிய நபர்களின் மத்தியில் பிறவியெடுத்து பல இடறல்களை அனுபவித்தே மீண்டும் வளரமுடியும் .

ஆகவேதான் இறை அச்சமும் ; தாழ்மையுமே மேன்மையானது என்று சகல வேதங்களும் சொல்கின்றன . 

குரான் : 39:20. ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும்.

98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன்இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

தானத்தின் வகைகள் :

கீதை 17 :2௦ எது கொடுக்கத்தக்கதோ அத்தகையவை உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய நபருக்கு பிரதி பலன் எதிர்பார்க்காமல் தானமாக வழங்கப்பட்டு அது இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டால் ; அத்தகைய தானங்கள் சத்வகுணமுள்ள தானமாக கருதப்படும்

கீதை எதைச்செய்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணம் என்ற மன நிலையிலேயே செய்ய வேண்டும் என திரும்ப திரும்ப வற்புருத்துகிறது .

குரானும் கூட மாஷா அல்லா – எல்லா புகழும் இறைவனுக்கே என்று மொழிகிறது . அல்லாஹு அக்பர் – இறைவனே மிகப்பெரியவன் என்று புகழ் பாடுகிறது .

இந்த வார்த்தைகள் ஸ்டைலாக நுனி நாக்கில் உச்சரிக்கத்தக்கதல்ல . அது உள்ளார்ந்து இதயத்திலிருந்து விளைந்து வரவேண்டும்

ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது..

எதையும் ஒரு ஸ்டைலாக நுனி நாக்கில் உச்சரித்து விட்டு அதற்காக பெருமையும் பாராட்டிக்கொள்கிற பழக்கம் மனிதர்களுக்கு நிறையவே உள்ளது . ஒவ்வொரு மார்க்கத்தாரும் இப்படி ஏதாவது ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் .

இதை உருவாக்கிய ஞானிகள் இப்படி பல முறை வாயிலாவது சொல்லும்போது கொஞ்சம் சொரணை வந்து அதை கடைப்பிடித்து விட மாட்டார்களா என்றுதான் அவைகளை உருவாக்குகிறார்கள்

ஆனாலும் இறைவனது ஆதங்கம் வாயினாலும் உதடுகளினாலும் கனம் பண்ணும் அளவு உள்ளார்ந்து இதயத்தில் பலர் இறைவனை கனம் பண்ணுவது இல்லை என்பதுதான் .

அப்படித்தான் இந்த தானங்கள் ; தொண்டுகள் ; இறைபணி ; ஊழியங்கள் எல்லாமே இருக்கின்றன . அவைகள் பல தினுஷுகளில் பல ரகங்களில் பூமியில் இருக்கின்றன . இறைவனுக்காக என்று ஆரம்பித்து செய்கையில் அவை அர்ப்பணம் என்பதற்கு பதிலாக பிழைப்புவாதங்கலாக மாறிவிடுகின்றன . இத்தகைய திசை திருப்புதல்களில் அசுர ஆவிகளின் கைங்கர்யம் நிறையவே இருக்கிறது

வெளியே இருந்து எதிர்க்கும் எதிரியைக்காட்டிலும் உள்ளிருந்து ஒத்துப்பாடி திசை திருப்பும் வேலை அதிக பலன் கொடுப்பது என்பது அசுரர்களுக்கு நன்றாகவே தெரியும்

இறைவனது வார்த்தைகளில் மெல்ல தங்கள் வார்த்தைகளை கலப்பதை அசுரர்கள் காலம்காலமாக செய்து அவைகளை கலக்கி குழப்பி விடுகிறார்கள் . குரானையும் கூட தங்கள் நாவுகளை கொஞ்சம் சுழற்றி ஓதி நீட்டி குறைத்து ஓதி அவைகளின் அர்த்தத்தை மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குரானிலேயே உள்ளது

சர்வ வல்லமை உள்ள இறைவன் யாரை எப்போது திருத்துவது என்பதை நன்றாகவே அறிவார் . ஆனால் இறைவனையும் அவனது மார்க்கத்தையும் காக்க பிற மனிதர்களின் மீது பலாத்காரத்தை பிரயோகப்படுத்துகிறேன் ; ஆயுதம் ஏந்துகிறேன் என்பது இறைவனை மனிதர்கள் காப்பாற்ற வேண்டிய அளவு கையாலாகதவர் என்பதாகும்

இறைவனை சார்ந்து வாழ்வது என்பது வேறு இறைவனுக்காக நான் இதை செய்கிறேன் அதனால் இறைவன் சொர்க்கத்தை எனக்கு கொடுப்பார் என பலன் எதிர்பார்ப்பது என்பது வேறு ,

ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்கிறது தமிழ் முதுமொழி

இறைவன் எனக்கு சொரக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்த்து இறைவனுக்கும் தொண்டு செய்யாதே ; நிச்சயம் அது தவறாகவே முடியும்

இறைவனை சார்ந்து அவருக்கு பயந்து வாழ்வதும் எதை செய்தாலும் அதை அர்ப்பணம் என்று செய்வதும் மட்டுமே சரியானதாகும்  யுக புருஷன் இயேசுவின் வார்த்தைகளை கேளுங்கள் :

மத்தேயு 6
11.   மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

4.
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

5.
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6.
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

ஆனால் அப்படியில்லாமல் பலன் எதிர்பார்த்து பிரபலப்படுத்திக்கொண்டோ அல்லது பிரபலம் இல்லாமலும் கூட தர்மங்கள் ; தொண்டுகள் ; இறைபணிகள் பல செய்யப்படுகின்றன . இவை சுயம் என்ற ரஜோகுணத்தின் வெளிப்பாடுகளே ஆகும்

கீதை 17 :21 எந்த விதமான பிரதி உபகாரத்தை எதிர்பார்த்தோ அல்லது திரும்ப பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ செய்யப்படும் தானங்கள் ரஜோகுண தானங்கள் எனப்படுகின்றன .

எல்லா வேதங்களும் இறைவனுக்கு அடியவனாக மாறுவதே முக்தி அல்லது முழுமை என்கின்றன . அந்த அடியவனாகுதல் என்பது சகலவற்றையும் கடந்து அவர் கரத்தில் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும் ஒரு நிலை . சும்மாயிரு என்பதுவே உபதேசம் . செயலில் செயலின்மையையும் ; செயலின்மையில் செயலையும் அடைகிறவனே முழுமை எய்தியவன் . மன சமநிலை எய்தி இறைவன் கரத்தில் கருவியாக இருக்க அவனால் மட்டுமே முடியும் .

இவைகளுக்கு அப்பாற்பட்டு உலக மாந்தர்களால் குடி கூத்துகளிலும் அற்ப சந்தோசம் ; அடிமைகள் அல்லக்கைகளை உருவாக்க ஊக்குவிக்க தானங்கள் பல செய்யப்படுகின்றன . இவைகள் தரம் தாழ்ந்த தானங்கள் ஆகும்

கீதை 17 :22 தூய்மை அற்ற இடங்களில் ; தூய்மை அற்ற செயல்களில் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக மனிதர்களை நடத்தி கொடுக்கப்படும் தானங்கள் தமோகுண வகைப்பட்டவையாம் .

நவீன நாத்திகவாதம் நீடித்த பலன் தராது  

கீதை 17 :23 ஓம் தத் சத் என்ற நித்தியமான வார்த்தை மூன்று வகையில் உணரப்படவேண்டும் .அது ஞானிகளாலும் யோகிகளாலும் பூசாரிகளாலும் பூசைகளின் போதும் வேள்விகளின் போதும் தவங்களின் போதும் வேதமந்திரங்கள் உச்சரிக்கும் முன்பு கடவுளை குறிக்க ஆதியில் பயன்படுத்தப்பட்டு வந்தது

ஸ்ரீகிரிஷ்ணர் ஆதி வழக்கத்தை – ஆதி இசுலாத்தை ஞாபகப்படுத்துகிறார் . எந்த ஆன்மீக பணிக்கு முன்பும் கடவுளை குறிக்க ஓம் தத் சத் என்ற வாசகம் உச்சரிக்கப்படவேண்டும் .
அது மூன்று அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும்

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – என்றென்றும் நித்தியமானவர்   

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – எங்கெங்கும் நிறைந்திருப்பவர்

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – உனக்குள்ளும் இருப்பவர்

இப்படி மூன்று விதமாக உச்சரிக்கப்பட்டே சகல உபன்யாசங்களையும் யாகங்களையும் பூசைகளையும் செய்விக்கப்படவேண்டும் என்ற ஆதி வழக்கம் காலப்போக்கில் மறைந்து விட்டது

கீதை 17 :24 ஆனாலும் உண்மையை உணர்ந்த ஆன்மீகிகள் கடவுளை அடைய யாகம் ; தானம் ; தவம் ; அன்றாட செயல்களை  மேற்கொள்ளும்போது சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப ஓம் தத் சத் என்றே துவங்குவர் .

எப்பணியை செய்தாலும் ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று அருவ ஏக இறைவனை துதித்தே தொடரவேண்டும் . அந்த கடவுள் இவர்தான் அவர்தான் என்று சிற்றறிவை கொண்டு தர்க்கம் செய்யலாகாது .

கீதை 17 :25 இப்படி பரிபூர்ணத்துடன் ஒத்திசையும் மனதுடன் யாகம் ; தவம் ; செயல்கள் செய்து பலனை கடவுளுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால் நமது பல்வகையான செயல்களும் நம்மை  உன்னதத்தை நோக்கி உயர்த்தும் .

கீதை 17 :26 சத் என்னும் சத்தம் பிரயோகப்படுத்தப்பட்டு பரத்தைப்பற்றிய உணர்வுடன் செயல்கள் செய்யப்படுவதால் பக்தர்களின் இயல்பில் பரமனின் இயல்பு பிரயோகமாகும் . இதனால் பார்த்தா அச்செயல்கள் பரத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக பரிணமிக்கும்  

கீதை 17 :27 இவ்வாறு கடவுளின் உணர்வில் நிலைத்து செய்யப்படும் யாகங்களும் ; யோகங்களும் ; தானங்களும் அனைத்து கர்மங்களும் கடவுளால் செய்யப்பட்டதாகவே கருதப்படும் .

கீதை 17 :28 கடவுளின் மீது நிலைக்காமல் அர்ப்பணிக்கப்படும் யாகப்பொருட்களாலும் ; நோர்க்கப்படும் யோகாப்பியாசங்களாலும் ; அசத் எனப்பட்ட நிலையற்றவைகளே விளையும் . அவைகளால் பூமிக்குரிய பலன்கள் சில கிடைக்குமே அன்றி பரத்தை அடைய பலன் கொடுக்காது .

இன்றைக்கு நாத்திகவாதம் எடுபடாமல் போய்விட்டது . அதை பிரபலப்படுத்தியோர் தங்களின் பிழைப்புவாதம் சுயநலம் விளம்பரம் ஆடம்பரத்தால் கேவலப்பட்டு இழிவு பட்டு விட்டனர்

அதனால் தங்களின் அறிவை ; சுயத்தை மெச்சிக்கொள்ளும் அறிவுஜீவிகளான நாத்திகவாதிகள் நாத்திகம் என்று தங்களை காட்டிக்கொள்வதை மறைத்து ஆன்மீகவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு ஆன்மீகத்தை கண்டுபிடித்து விட்டனர் .

அதற்கு அவர்களுக்கு கிடைத்த ஒரு கூடாரம் சித்தர்கள் நெறி . சித்தர்களில் பாதிக்கு பாதி பக்தியும் மறுமையையும் பரப்பியவர்கள் . மரணமில்லாபெருவாழ்வு ஒளி சரீரம் அடைய இறைவனை நாடியவர்கள் . பாதி கடவுள் நம்பிக்கையை ஒதுக்கி சாதகம் செய்தால் நாமும் கடவுளாகலாம் என்றவர்கள்

கடவுளை புறக்கணித்து யோகம் செய்தால் போதும் குண்டலினியை ஏற்றி இறக்கினால்போதும் சித்து செய்தால் போதும் வைத்தியம் மூலிகை காயகல்பம் முப்பு என்றலைந்து அதிகபட்சம் பூமியில் ஜீவசமாதியடைந்து உலகை இவர்கள்தான் கட்டிக்காப்பதாக அலட்டிக்கொள்ளும் ஒரு கூட்டம் இன்று பெருத்து விட்டது . பெரிய பெரிய யோகா வியாபாரிகள் வந்து அறிவை நம்பு யோகம் செய் உலகில் சிறப்பாக வாழலாம் என்று சக்கை போடு போடுகின்றனர்

உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை புறப்படவேண்டிய தமிழ் சமூகத்தை இந்த நவீனநாத்திகவாதிகள் ஆன்மீக போர்வையில் வளர விடாமல் தடுத்துக்கொண்டுள்ளனர் .

கடவுள் நம்பிக்கையும் பக்தியும் இல்லாத யோகாப்பியாசங்களால் உடலையும் மனதையும் சீர் செய்து பூமியில் கொஞ்சம் லெகுவாக வாழலாமே ஒழிய நிலையான பலன் நிம்மதி வரவே வராது .

பக்தியால் கீழ்படிதலும் கடவுளின் மீது நிலைத்த உணர்வுடன் அவனுக்கு அர்ப்பணமாக செயல்கள் அனைத்தையும் செய்கிற மனநிலையோடு யோகாப்பியசத்தையும் தியானத்தையும் பிரார்த்தனையையும் கடைபிடிக்கிறவனே முழுமை அடைவான் ; பரத்தை அடைவான் .

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி


தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  




No comments: